கில்லி படத்தில் இந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக மாற்றி அமைத்த தயாரிப்பாளர்..!

கில்லி படத்தில் இந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக மாற்றி அமைத்த தயாரிப்பாளர்..!

தமிழ் திரை உலகத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கில்லி படத்தில் இந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக மாற்றி அமைத்த தயாரிப்பாளர்..!
இந்தப் படம் முடிந்த பிறகு தளபதி 69 படத்தோடு திரை உலகில் விட்டு விலகப் போகும் தளபதி விஜய் முழு நேர அரசியலில் களம் இறங்க இருப்பதாக செய்திகள் வெளி வந்து அதற்கான ஆயத்த பணிகளும் நடந்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

தளபதி விஜய்..

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து இருக்கும் தளபதி விஜயின் கில்லி திரைப்படம் மிக நல்ல வசூலை பெற்று தந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 20 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்து தியேட்டர்களில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

படம் முதல் முதலாக எப்படி ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டதோ, அது போல இந்த முறையும் புது படம் ரிலீஸ் ஆனது போல இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

கில்லி படத்தில் இந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக மாற்றி அமைத்த தயாரிப்பாளர்..!
இந்நிலையில் விஜய் உடன் கில்லி படத்தில் தங்கை கேரக்டரில் நடித்த பெண் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அப்படி ஒரு கேரக்டர் வைக்கவே இல்லை.

ஆனால் அந்த கேரக்டரை விஜய்க்காக வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளி வந்து ஆச்சரியத்தில் ரசிகர்களை மூழ்கடித்துள்ளது.

கில்லி படத்தில் அந்த கேரக்டர் இல்ல..

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு 17-ஆம் தேதி தமிழகம் எங்கும் வெளி வந்த கில்லி திரைப்படம் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை செய்தது.

மேலும் இந்த படத்தில் திரிஷா, பிரகாஷ்ராஜ், தாமு, விமல் என பல ரசிகர் பட்டாளம் நடித்து கதைக்கு பக்கபலமாக தங்களது நடிப்புத் திறனை அசாத்தியமாக வெளிப்படுத்தி இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படம் ஏப்ரல் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கில்லி படத்தை பார்த்து ரசிகர்கள் ஆட்ட பாட்டத்ததோடு கொண்டாடி வருகிறார்கள்.

கில்லி படத்தில் இந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக மாற்றி அமைத்த தயாரிப்பாளர்..!
மேலும் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லான நிலையில் ஒவ்வொரு நாளும் காட்சிகள் தெறித்து வருவதாக பலரும் கூறியுள்ள நிலையில் இது வரை சுமார் 20 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

விஜய்க்காக மாறிய கதை..

அந்த வகையில் இந்த படத்தின் கதையில் விஜய்க்கு தங்கையாக நடிக்கக்கூடிய கதாபாத்திரமே இல்லையாம். ஆனாலும் விஜய்க்காக கதையை தயாரிப்பாளர் மாற்றி அமைத்திருக்கிறார். இந்த விஷயத்தை சதீஷ் ஸ்டீபன் அண்மை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

கில்லி படத்தில் இந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக மாற்றி அமைத்த தயாரிப்பாளர்..!
தங்கை பாத்திரத்திற்கு பதிலாக இந்த படத்தில் தம்பி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருந்தவர். இயக்குனர் தரணி அந்த கதாபாத்திரத்தை மாற்றி தங்கையாக மாற்றி வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததால் தான் நடிக்க முடியவில்லை என்ற விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.

About Janett J

Avatar Of Janett J

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version