நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு என இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்த படங்கள் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. என்றாலும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கக்கூடிய துணிவு திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களையும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் கலையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
முன்னதாக நடிகர்கள் விஜய், அஜித் நடிப்பில் வெளியான வீரம் மற்றும் ஜில்லா திரைப்படங்கள் இரண்டும் மோதிக்கொண்டன இந்த இரண்டு திரைப்படங்களிலும் வீரம் திரைப்படம் ஹிட் அடித்தது.
அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான விசுவாசம் மற்றும் பேட்ட ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டன இதில் விசுவாசம் திரைப்படம் அதிக வசூல் பெற்று வெற்றி பெற்றது.
தற்பொழுது வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் துணிவு திரைப்படத்தின் கையை ஓங்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
விமர்சன ரீதியிலும் சரி.. வசூல் ரீதியிலும் சரி.. வாரிசை விட துணிவு திரைப்படம் ஒருபடி மேலே இருக்கிறது. விமர்சனம் பற்றி பார்த்து விட்டோம் தற்பொழுது இந்த படங்களின் வசூல் பற்றி பார்ப்போம்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 39 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. மறுபக்கம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள துணிவு திரைப்படம் 42 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இங்கே விமர்சன வீதியிலும் வசூல் ரீதியிலும் வாரிசை விட ஒரு படி முன்னே நிற்கிறது துணிவு. இந்த வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.