அடேங்கப்பா..! – தோனியின் அந்த ரெகார்ட்-ஐ அசால்டாக முறியடித்த டிம் சவுதி..!!!

NZ vs ENG:

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது போட்டியின், மூன்றாவது நாளில், NZ அணியின் கேப்டன் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். 73 ரன்கள் விளையாடியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடிக்கும் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 90 போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி 144 இன்னிங்ஸ்களில் 4876 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் 6 சதங்களும் 33 அரை சதங்களும் அடித்துள்ளார்.544 பவுண்டரிகளும் 78 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.

சவுதி 49 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்:

டிம் சவுத்தி தற்போது நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 49 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியை 209 ரன்களுக்கு அழைத்துச் சென்றார். அவர் 9வது இடத்தில் பேட்டிங் செய்ய இறங்கினார். அவர் வேகப்பந்து வீச்சுக்கு பெயர் பெற்றவர் என்றாலும், போட்டியின் மூன்றாவது நாளில், அவர் ஆட்டத்தில் ஒரு அட்டகாசத்தை உருவாக்கி, 73 ரன்களில் அதிரடியாக விளையாடினார்.

இதுவரை டிம் சவுத்தி 82 சிக்சர்களும், தோனி 78 ரன்களும் அடித்துள்ளனர்.
டிம் சவுதி தனது இன்னிங்ஸில் 5 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 1 சிக்ஸர் அடித்த உடனேயே எம்எஸ் தோனியின் சாதனையை சமன் செய்தார். பின்னர், அவர் 4 சிக்ஸர்கள் அடித்து தோனியை விட வெகுவாக முன்னேறினார். டெஸ்டில் தோனி 78 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில், சவுதி 82 சிக்ஸர்கள் அடித்து டோனியின் சாதனயயை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ் – 109
பிரண்டன் மெக்கல்லம் – 107
ஆடம் கில்கிறிஸ்ட் – 100
கிறிஸ் கெய்ல் – 98
ஜாக் காலிஸ் – 97