கொட்டும் மழை.. கவர்ச்சி ஆட்டம் போட்ட திரிஷா – கூடவே சேர்ந்து ஆடிய ரசிகர்கள்..! – குலுங்கும் இண்டர்நெட்!

தமிழில் பல திரைப் படங்களில் நடித்திருக்கும் நடிகை திரிஷா தெலுங்கில் முதன்முறையாக வர்ஷம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் தமிழில் மழை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்த இவர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் 30 ஆண்டுகால கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் ஆக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

தொடர்ந்து திரிஷாவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் இரண்டு வெப்சீரிஸ் மற்றும் இரண்டு திரைப்படங்கள் என இன்னும் வெளியாகாமல் பொட்டியில் தூங்குகிறது.

இந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்த வர்ஷம் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படம் தமிழில் மழை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க நடிகை ஸ்ரேயா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் இந்த திரைப்படம் ஆந்திராவில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம் கிட்டதட்ட ஐந்து திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற நூவஸ்தாவண்டே என்ற பாடலுக்கு நடிகை திரிஷா உடன் சேர்ந்து ஒட்டு மொத்த திரையரங்கில் இருந்த ரசிகர்களும் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது குறித்து நடிகை திரிஷா பதிவிட்டுள்ள ஒரு பதிவில் “18 ஆண்டுகள் கழித்து என் முதல் திரைப்படம் முதல் தெலுங்கு திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது நேற்று தான் இந்த படம் வெளியானது போன்ற உணர்வு எனக்கு இருக்கிறது உங்களால் தான் நான்.. லட்சம் முறை சொல்லியிருக்கிறேன்.. மீண்டும் சொல்கிறேன்.. உங்களுக்கு நன்றி..” என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை திரிஷா. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version