ஈரான் நாட்டு கோடீஸ்வரி..நடன இயக்குனர் மகள்.. சிம்புவின் அம்மா உஷா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

ஈரான் நாட்டு கோடீஸ்வரி..நடன இயக்குனர் மகள்.. சிம்புவின் அம்மா உஷா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

தமிழின் பிரபல நடிகரான சிம்புவின் தாயாரும் இயக்குனர் டி.ராஜேந்திரன் மனைவியும் ஆன உஷா குமாரியின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஒரு கதை ஆகும். பலருக்கும் இவரை டி.ராஜேந்திரனின் மனைவியாகதான் தெரியும்.

அதற்கு முன்பு இவர் ஒரு கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார் கோபால் மற்றும் ரஞ்சனி ஆகிய இருவருக்கு பிறந்தவர்தான் நடிகை உஷா குமாரி. உஷாவின் தந்தை சம்பத் அப்போதைய கால கட்டங்களில் தென்னிந்திய உலகில் பிரபல நடன கலைஞராக இருந்து வந்தார்.

அதேபோல அவரது தாயாரும் நடன கலைஞராகவே இருந்து வந்தார் இதனால் உஷா குமாரியின் சகோதரியான ஸ்வர்ணமுகி பலவகை நாட்டிய திறமைகளை கொண்டவராக இருந்தார். சிற்ப சாஸ்திரத்தில் தொடங்கி நாட்டிய கலை வரை அனைத்தையும் கற்றுக் கொண்ட அவர் 52 உலக நாடுகளுக்கு சென்று நாட்டியத்தால் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார்.

கோடீஸ்வர குடும்பம்:

அதே போல நடிகை உஷா குமாரியும் நடனத்தில் சிறந்து விளங்கி வந்தார் உஷா குமாரியின் பாட்டியானவர் ஈரானில் எண்ணெய் கிணறு வைத்திருந்த மாபெரும் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் இந்தியர் ஒருவரை காதலித்து அதன் மூலமாக இந்தியா வந்ததன் விளைவாகத்தான் அவரின் பரம்பரைகள் இந்தியாவில் காலுன்றினர்.

ஈரான் நாட்டு கோடீஸ்வரி..நடன இயக்குனர் மகள்.. சிம்புவின் அம்மா உஷா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

அந்த வகையில் மூன்றாவது தலைமுறையாக வந்தவர்தான் நடிகை உஷா குமாரி. இவ்வளவு சிறப்புகளை பெற்றிருந்தாலும் கூட மிக சாதாரணமாக துணை கதாபாத்திரமாகதான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை உஷா குமாரி.

பட வாய்ப்பு:

கிழக்கே போகும் ரயில் திரைப்படத்திற்கு பிறகு பாரதிராஜாவிற்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்புகள் வந்தது. அதனை அடுத்து அவரின் உதவி இயக்குனரான பாக்யராஜையே கதாநாயகனாக வைத்து அவர் இயக்கிய திரைப்படம் புதிய வார்ப்புகள்.

இந்த திரைப்படத்தை மனோஜ் கிரியேஷன் என்கிற நிறுவனம் தயாரித்தது புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் சண்முகமணி என்கிற ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு துணை கதாபாத்திரமாக பாக்கியராஜ் போலவே ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு சமூக சேவகியாக அறிமுகமானார் உஷா குமாரி.

ஈரான் நாட்டு கோடீஸ்வரி..நடன இயக்குனர் மகள்.. சிம்புவின் அம்மா உஷா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

அதற்கு பிறகு அவரது தனிப்பட்ட நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து டி ராஜேந்தர் இயக்கிய ஒரு தலை ராகம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஒரு தலை ராகம் திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரும் வெற்றியை கொடுத்ததுடன் இவருக்கும் அதை பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதற்கு பிறகுதான் இவருக்கும் டி ராஜேந்தருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பிறகு அது காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.