“இனி மூட்டை முடிச்சு கட்டிட வேண்டியதுதான்..” வடிவேலு செய்த வேலையை பாருங்க..!

“இனி மூட்டை முடிச்சு கட்டிட வேண்டியதுதான்..” வடிவேலு செய்த வேலையை பாருங்க..!

நடிகர் வடிவேலுவை போல தமிழ் சினிமாவில் ஒருகால கட்டத்தில் பிஸியாக இருந்த நடிகரும் இல்லை. இப்போது பட வாய்ப்புகளே இல்லாமல் சும்மா இருக்கும் நடிகரும் யாரும் இல்லை என்று விமர்சிக்கும் அளவுக்கு அவரது சூழல் மாறியிருக்கிறது. தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப தேவையில்லாமல் பேசி பேசியே தனது பெயரை கெடுத்துக்கொண்டவர்தான் வடிவேலு.

சின்னக்கவுண்டர் படத்தில், கேப்டன் விஜயகாந்துக்கு குடை பிடித்துக் கொண்டே அவருடன் நடந்துவரும் மாகாளி என்ற கேரக்டரில், வடிவேலு நடித்திருப்பார். அந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி டிராக்கில் நடித்த நிலையில், வடிவேலுவுக்கு கேரக்டர் தர ஒன்றுமில்லை என படத்தின் இயக்குநர் ஆர்வி உதயக்குமார் மறுத்த இருக்கிறார்.

ஆனால் விஜயகாந்த் தான் விடாப்பிடியாக என்னுடன் குடை பிடித்து வருவது போல ஒரு கேரக்டரை கொண்டு வாருங்கள், அதில் வடிவேலு நடிக்கட்டும் என்று கூறியிருக்கிறார். அந்த படத்தில் நடித்த பிறகுதான், சிங்காரவேலன் படத்திலும், அதைத்தொடர்ந்து இசக்கி கேரக்டரிலும் வடிவேலு நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.

பெயர், புகழ், செல்வாக்கு என தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் என சிறப்புகளை பெற்ற வடிவேலு, ஒரு கட்டத்தில் நடிகர் விஜயகாந்தை, திமுக மேடைகளில் கடுமையாக விமர்சித்து பேசினார். தவிர, இயக்குநர் ஷங்கரிடமும் தகராறு செய்த நிலையில், அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்து போய்விட்டது. 10 ஆண்டுகள் வரை நடிக்காமல் இருந்த அவர் அதன்பிறகு நடித்த சில படங்களும் ஓடவில்லை.

இப்போது கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது குறித்து வடிவேலு மீது தமிழ் சினிமா ரசிகர்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். அதனால் மதுரையில் 20 ஆயிரம் சதுர அடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பங்களாவில் குடும்பத்துடன் குடியேற உள்ளார். ஏனெனில், இனி தமிழ் சினிமாவில் வாய்ப்பற்ற நிலையில், சென்னையில் சும்மா இருக்காமல் சொந்த ஊரிலேயே செட்டில் ஆக வடிவேலு முடிவு செய்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.