விஷப்பாம்பு வடிவேலுவை அடிக்க அஞ்சு நிமிஷம் போதும் - கொந்தளித்த பிரபலம்..

விஷப்பாம்பு வடிவேலுவை அடிக்க அஞ்சு நிமிஷம் போதும் – கொந்தளித்த பிரபலம்..

நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகராக ஜொலித்தார் என்றால் அது மிகையல்ல. தினமும் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிற அளவுக்கு அவரது சினிமா மார்க்கெட் இருந்தது. வடிவேலு கால்ஷீட் கிடைக்குமா, என்பதுதான் பல தயாரிப்பாளர்களின் கேள்வியாக இருந்தது. அப்படி இருந்த வடிவேலு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பின்றி இருக்கிறார். அதற்கு காரணம், விஜயகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் போன்றவர்களை அவர் பகைத்துக்கொண்டதுதான்.

குறிப்பாக சின்னக்கவுண்டர் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பளித்த நன்றியே இல்லாமல் வடிவேலு நடந்துக்கொண்டது ரசிகர்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. கேப்டன் விஜயகாந்தை, எந்த கப்பலுக்கு கேப்டன் இவரு, என்றெல்லாம் திமுக பிரசார மேடைகளில் வடிவேலு ஓவராக பேசியதை, ரசிகர்கள் விரும்பவில்லை.

அதுமட்டுமின்றி, இப்போது விஜயகாந்த் மறைந்த நிலையில், அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கலாம். வர அச்சமாக இருந்த பட்சத்தில், ஒரு இரங்கல் செய்தியாவது அறிவித்திருக்கலாம். ஆனால் உள்ளூரில் இருந்தும் கமுக்கமாக இருந்தவர் வடிவேலு.

பல ஆண்டுகளாக, விஜயகாந்த் நடித்த பல படங்களுக்கு மேனேஜராக பணிசெய்தவர் ராஜேந்திரன். அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியதாவது,வடிவேலு யாரையுமே வளர விடமாட்டார். அவர், அவரது வாழ்க்கையை மட்டுமே சுயநலமாக பார்த்துக்கொள்வார். தன்னுடன் நடிப்பவர்களுக்கு, தயாரிப்பாளரே கூடுதலாக சம்பளம் கொடுக்க முன்வந்தாலும், அவர்களுக்கு கூடுதல் சம்பளம் தருவதற்கு வடிவேலு விடமாட்டார். அதில் அவர் மிக தெளிவாக இருப்பார்.

தன்னுடன் இருப்பவர்களை வளரவிடும் எண்ணமே வடிவேலுக்கு எப்போதும் கிடையாது. ஆனால் விஜயகாந்த் அப்படியல்ல. தன்னிடம் இருப்பவர்கள் அனைவருமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர். ஆரம்பத்தில் வடிவேலுவை எப்படி கேப்டன் கவனித்துக்கொண்டார் என்பது எனக்குத் தெரியும். மாத்து துணி கூட இல்லாமல் வந்தவர்தான் நடிகர் வடிவேலு.
அவர் ஒரு விஷப்பாம்பு. வடிவேலு நடிக்காமல் இருந்தபோது கூட, அவர் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டார் கேப்டன் விஜயகாந்த்.

விஜயகாந்த் வீட்டுக்கு பக்கத்து தெருவில்தான் வடிவேலு வீடு இருக்கிறது. அவரது வீட்டுக்குள் புகுந்து வடிவேலுவை அடிக்க எவ்வளவு நேரமாகும். ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை.அவர் நேரில் வராவிட்டாலும், ஒரு இரங்கல் செய்தியாவது கொடுத்திருக்கலாம், நன்றி கெட்ட வடிவேலு என்று அதில் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.