என்னது ஒரு நாளைக்கு 25 லட்சமா? எப்படி… சமாளிக்க… கே.எஸ் ரவிக்குமார் புலம்பவிட்ட வடிவேலு!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வடிவேலு நடிக்க தொடங்கியிருக்கிறார். தற்போது இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. சில படங்களில் ஹீரோவாகவும் லாரன்ஸ் மற்றும் உதயநிதி படங்களில் காமெடியனாக களமிறங்கி இருக்கிறார்.

நகைச்சுவை நடிகராக ஒரு சில சீன்களே ஆரம்ப நாட்களில் செய்த இவருக்கு சில வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பேச்சும் அவருடைய பாடி லாங்வேஜ்  மிகச் சிறந்த காமெடியனாக இவரை வளர்த்து விட்டது.

 இந்நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தனது படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்காக கால்ஷீட் கேட்டிருக்கிறார். சுமார் இருபது நாட்கள் தேவையான நிலையில் அவர் அந்த 20 நாள் கால்ஷீட் தந்துள்ளார். ஆனால் அதில் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது .அந்த விஷயத்தை கேட்டுத்தான்  கே எஸ் ரவிக்குமார் அலறிவிட்டார்.

மேலும் அடுத்தடுத்து படங்கள் வந்து குவிய கூடிய வேளையில் வடிவேலு தன்னுடைய சம்பளத்தை  இமாலய உயர்த்தி விட்டார். கேஎஸ் ரவிக்குமார் படத்தில் ஒருநாள் நடிப்பதற்கு இவர் கேட்ட தொகை 25 லட்சம் ஆகும். கணக்கு போட்டு பாருங்கள் 20 நாளுக்கு 25 லட்சம் என்றால் இவருக்குக் எத்தனை கோடி சம்பளம் என்று.

ஊம்… 5 கோடி ரூபாயை இவருக்கு சம்பளமாக கொடுத்து விட்டால் மற்ற நடிகர்களுக்கு தான் எப்படி சம்பளம் கொடுக்க முடியும் என்று புலம்பித் தள்ளிகிறார் கே எஸ் ரவிக்குமார்.

தற்போது சந்திரமுகி 2 படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய வடிவேலு லாரன்சுடன் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகிறார். இதுப்போக நாய் சேகர் ரிட்டன் என்ற படத்தில் கதாநாயகனாக வலம் வர இருக்கிறார்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப வடிவேலு எப்படி பழிவாங்குவது  நியாயம்தானா? ஆரம்ப நிலையில்   அவர் சினிமா பயணத்தில் எவ்வாறு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை எல்லாம் மறந்துவிட்டு இப்போது மிகப் பெரிய அலப்பறையை ஏற்படுத்தியிருப்பது அனைவருக்குமே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் கே எஸ் ரவிக்குமாருக்கு வடிவேலு என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version