வைத்தீஸ்வரன் கோயில்.

அமெரிக்கர்களை வியக்க வைத்த வைத்தீஸ்வரன் கோயில்  அற்புதம்.

இது ஒரு செவ்வாய் ஸ்தலம்.செவ்வாய் தான் ரத்தத்துக்கு அதிபதி.சகோதரனுக்கு அதிபதி யுத்தத்துக்கு அதிபதி.வெட்டு,குத்து,காயம்,அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு இவரே காரணமாகிறார்.விபத்துக்கள் இவர் சனி,சூரியன்,கேது,போன்ற பாவ கிரகங்களுடன் சேர்வதால் உண்டாகிறது.வயிறு நோய் முதல் உடல் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கும்,கடும் விஷ ஜுரத்துக்கும் இவர் ஜாதகத்தில் பாதிப்பதால் உண்டாகிறது.இதன் அதிபதியான முருகனை வழிபட்டால் இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். இந்தக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். 

இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். 

இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது.இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.சிவன் ஸ்தலமாக இருப்பினும் முருகன் இங்கு பிரபலம்.மருத்துவ கடவுள் தன்வந்திரிக்கு இங்கு தனி சன்னதி உண்டு.மருத்துவர்கள் பெரும்பாலும் செவ்வாய் கிழமையில் அதிகம் வந்து வழிபடுவர்.

இத்தலத்தில் காலடி வைத்தாலே பில்லி, சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.

 

தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது.

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.  என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தை சொல்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version