AK ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கிய செய்தி.. என்ன ஜோக் காட்றீங்களா..? – கதறும் ரசிகர்கள்…!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் AK – எச்.வினோத் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை ( Valimai ). போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது.

இப்படத்தில் நடிகர் AK போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தாயாராகி வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ளதால், படத்தை புரமோட் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.வலிமை படத்தின் கதை வேறு ஒரு ஹீரோவுக்காக எழுதியது என்று இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முதலில் இதில் போலீஸ் கதாபாத்திரம் இல்லாமல் இருந்ததாகவும், AK படத்தில் இணைந்தவுடன் தான் சிறிய மாற்றம் செய்து போலீஸ் கதாபாத்திரத்தை சேர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் வலிமை படத்தின் கதை எந்த ஹீரோவுக்காக எழுதப்பட்டது என்பது குறித்த தகவலை இயக்குனர் எச்.வினோத் வெளியிடவில்லை.

வலிமை படத்துக்கு பின் AKவின் 61-வது படத்தை இயக்க உள்ள எச்.வினோத், அது முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், வலிமை திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவி வருகின்றது.

Netflix நிறுவனம் மிகப்பெரிய 250 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்கியுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

AK ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கியுள்ளது இந்த செய்தி. இதனை அறிந்த ரசிகர்கள், என்ன ஜோக் காட்றீங்களா..? என்று தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களை டேக் செய்து விளாசி வருகின்றனர்.

மேலும், வலிமை படத்தை Netflix வாங்கியது உண்மை தான் எனவும், தியேட்டர் ரிலீசுக்கு பிறகு மூன்று வாரங்கள் கழித்தே OTT-யில் படம் வெளியாகும் எனவும் விவரம் அறிந்த வட்டாரங்களிடமிருந்து தகவல் வந்துள்ளது.