மீண்டும் சூர்யா இயக்குனர் பாலா இணைந்து மிரட்டும் வணங்கான் – அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

இயக்குனர் பாலாவின் கடைசி படமான நாச்சியார் திரைப்படத்தில் ஜோதிகா ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றியை தந்தது. இதன் பின்னர் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற ரீமேக்கான படத்தை வர்மா என்ற என்ற பெயரில் இயக்கினார்.

எனவே இயக்குனர் பாலா நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் மிகவும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைத்திருந்தார். இதன் மூலம் இவர் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

இந்தப் படத்தில் இவரின் நடிப்பை பார்த்து அனைவரும் பிரமித்தனர். தற்போது பாலாவும், சூர்யாவும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ செய்தியை மிக விரைவில் நாம் பெறலாம். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவர உள்ள இந்தப் படத்தின் தலைப்பானது தமிழில் வணங்கான் என்றும் தெலுங்கில் அச்சாலுடு என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் மேற்கொள்வார் என்றும் இசை ஜிவி பிரகாஷ் அமைப்பார் என தெரிகிறது. மேலும் கலை இயக்குனராக மாயப் பாண்டியும் எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணிபுரிய உள்ளார்கள். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைகிறார்.

மேலும் படத்தின் மற்றொரு கதாநாயகியாக மலையாள நடிகை மமீதா பைஜூ இணைகிறார். இது இவருக்கு தமிழில் அறிமுகமாகும் முதல் படம் ஆகும். இதையடுத்து இந்த படத்துக்கான சூட்டில் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருவதாக தெரிகிறது.

மேலும்  இந்த படத்தின் பாடல் பதிவுகள் துவங்க உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை அமைக்கும் பாலா தனது விவாகரத்துக்குப் பின்பு செய்யக் கூடிய படமாக இது இருப்பதால் இது எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version