சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை வரலட்சுமி சரத்குமார்..!

பிரபல இளம் நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வரலட்சுமி சமீபத்தில் நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆனது.

வரலட்சுமி பயணித்த விமானத்தில் எதேச்சையாக நடிகர் விஜய்யும் பயணிக்க அவருடன் சேர்ந்து சில செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் வரலட்சுமி.

கருப்பு சட்டை அணிந்து இருக்கும் நடிகர் விஜய் வெள்ளை தாடி சகிதமாக தனக்கே உரித்தான ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்தபடி நடிகை வரலட்சுமியுடன் எடுத்துக் கொண்ட இந்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

இதுகுறித்து நடிகை வரலட்சுமி பதிவு செய்துள்ளதாவது, இப்படி ஒரு அருமையான விமான பயணத்தை இதுவரை நான் மேற்கொண்டது கிடையாது. எனக்கு மிகவும் பிடித்த.. மிகவும் விருப்பமான நடிகர் விஜய் என்னுடன் இருக்கிறார், இது ஒரு சிறப்பான நாள். மிகவும் நன்றி ஜெகதீஷ். நிறைய பேச்சுக்கள், லூடோ விளையாட்டு.. சிரிப்பு என மகிழ்ச்சியான ஒரு விமான பயணமாக இது அமைந்தது.

இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் நடிகை வரலட்சுமி. வாரிசு படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மகள் நடிகர் விஜய்யை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிகை வரலட்சுமி கவனத்தை செலுத்தி வருகிறார். மட்டுமில்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் அவருக்கு வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து முயற்சி செய்து வரும் நடிகை வரலட்சுமி சமீபகாலமாக தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் வரலட்சுமி சரத்குமார் என்றால் புசுபுசுவென இருந்தால் தான் எங்களுக்கு பிடிக்கும் இப்படி ஒல்லியாக இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மறுபக்கம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தான் கவனம் செலுத்த வேண்டும் எனவே வரலட்சுமி உடல் எடை குறைத்தது ஒன்றும் பெரிய குற்றம் கிடையாது என்று கூறும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

உடல் எடையை குறைத்த பிறகு தான் விரும்பிய கவர்ச்சி உடைகளை தேர்வுசெய்து தேடித்தேடி அணிந்து புகைப்படங்களை வெளியிடுகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அந்த வகையில், சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்ற அவர் அங்கு நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போதும் நீச்சலுடையில் அதுவும் மோனோகினி ரக சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவளுடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …