தளபதிக்கு ஆப்பு வைத்த “வாரிசு” படக்குழு.. லட்சங்களை கொட்டியும் பலன் இல்லையே..!

நடிகர் விஜய்யை இயக்கப் நடிப்பில் இயக்குனர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.,

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் திரைப்படத்திற்கு பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு  தனியாக போட்டோ சூட்டுக்கு நடத்தப்படாமல் வெறும் போட்டோஷாப்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இத்தனைக்கும் இந்த போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. பொதுவாக விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது என்றால் இணையதளங்கள் திருவிழா போல கலைகட்டும்.

ஆனால், இந்த படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது என்றே தெரிகிறது. இந்த திரைப்படத்தின் போஸ்டர் கோபி பிரசன்னா என்பவர் வடிவமைத்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில், மாஸ்டர், மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இவர்தான் போஸ்டர் டிசைனர். செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்துள்ள இவர் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில்  சறுக்கி விட்டார் என்று ரசிகர்கள் உச் கொட்டுகிறார்கள்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பின்னணியில் இடம்பெற்றிருந்த பில்டிங் மற்றும் இன்னும் பல சமாச்சாரங்கள் அனைத்தும் கூகிளில் தேடினாலே கிடைக்கின்றது. அந்த அளவிற்கு மெத்தனமாக படக்குழு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் கவனத்தை செலுத்தி யுள்ளது.

கிட்டத்தட்ட 14 லட்ச ரூபாய் பஸ்ட் லுக் போஸ்டருக்கு மட்டுமே செலவு செய்வதாக கூறும் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதற்கான வேலையை கிரியேட்டர்களிடம் இருந்து வாங்காமல் போய்விட்டது என்பதுதான் உண்மை.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த போஸ்டரில் நடிகர் விஜய் வழக்கத்துக்கு மாறாக இன்னும் இளமையாக தெரிகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படி லட்சங்களை செலவு செய்தும் தளபதிக்கு மாசான ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயார் செய்யாமல் விஜய்க்கு ஆப்பு வைத்துவிட்டார்களே.. இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பி வருகின்றனர் சினிமா ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …