இணையத்தில் லீக் ஆன “வாரிசு” பட பாடல் காட்சிகள்..! – ரசிகர்கள் ஷாக்..! -தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் முதல் தெலுங்கு திரைப்படமான வாரசுடு என்ற திரைப்படம் தமிழிலும் “வாரிசு” என்ற தலைப்பில் தயாராகி வருகின்றது. நடிகர் விஜய் நடிக்க உள்ள முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் வரும் 2023 பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் ஆக்ஷன் கமர்சியல் இதையெல்லாம் தாண்டி காதல் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட ஃபேமிலி எண்டர்டெயினர் ஆக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தில் இருந்து சற்று விலகி சாக்லேட் பாயாக நடிகர் விஜய் நடிப்பார் என்ற தகவல் படம் பூஜை போட்டபோது வெளியானது.

காவலன் படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து நடிகர் விஜய் இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதி முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் போட்டு எடுக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் 23 வினாடி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தன்னா ஹீரோவை கலாய்க்கும் படியும், அவரது குணத்தை வர்ணிப்பது போலவும அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பொதுவாக நடிகர் விஜய் படங்களின் படப்பிடிப்பின்போது படப்பிடிப்புக் காட்சிகள் லீக் ஆவது வழக்கம். ஆனால் தற்போது ஒரிஜினல் பாடல் காட்சியே இணையத்தில் லீக் ஆகியுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …