Tuesday, September 24

நான் இதை எதிர்பாக்கல.. நீங்க எனக்கு பெரிய.. என்னை இப்படி பண்றது ஈஸி இல்ல.. மாதம்பட்டி ரங்கராஜ் × வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் எடுக்க பிறகு அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்சமயம் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக மாறி இருக்கிறது.

ஆனால் இந்த ஐந்தாவது சீசன் மட்டும் குக் வித் கோமாளியில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சியை அதுவரை தொகுத்து வந்த மீடியா மெஷின் நிறுவனத்திடம் இருந்து விஜய் டிவி கையகப்படுத்தியது.

நான் இதை எதிர்பாக்கல..

இதனால் மீடியா மெஷின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதுவே பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஒரு பக்கம் கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் காமெடிகளை செய்து வந்தாலும் அதற்கு இணையான காமெடி செய்யக்கூடியவராக வெங்கடேஷ் பட் இருந்து வந்தார்.

இதனால் இவருக்குமே கூட ஒரு ரசிக்கப்பட்டாளம் இருந்து வந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டுக்கு மாறுதலாக மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களை களம் இறக்கினர் விஜய் டிவியில் நிறுவனத்தார்.

ன்னை இப்படி பண்றது ஈஸி இல்ல

ஆரம்பத்தில் மாதம்பட்டி ரங்கராஜை மக்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கூட மாதம்பட்டி ரங்கராஜ் அவருக்கு இருந்த தனிப்பட்ட ஸ்டைலை பயன்படுத்தி தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெங்கடேஷ் பட் ஒரு பேட்டியில் பேசும் பொழுது மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து நிறைய விஷயங்களை கூறி இருந்தார். எனக்கு என்று நான் ஒரு தனிப்பட்ட இடத்தை குக் வித் கோமாளியில் உருவாக்கி வைத்திருந்தேன்.

மாதம்பட்டி ரங்கராஜ் × வெங்கடேஷ் பட்

அந்த இடத்தை மாற்றி அதில் தனக்கென இன்னொரு இடத்தை மாதம்பட்டி ரங்கராஜ் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இருந்தாலும் கூட நிகழ்ச்சிக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு இவரும் நகைச்சுவைகள் எல்லாம் செய்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

அது மிகவும் பாராட்டுக்குரியது. மாதம்பட்டி ரங்கராஜை எனக்கு இதற்கு முன்பே தெரியும் ஒரு முறை நான் ஊட்டிக்கு எனது சீனியருடன் சென்று கொண்டிருந்த பொழுது மாதம்பட்டி ரங்கராஜின் பிளக்ஸ் ஒன்று இருந்தது. அதை பார்த்து நான் யார் இவர் புதிதாக இருக்கிறார் என்று கேட்டேன் அப்பொழுது கூறிய எனது சீனியர் முதலில் கல்யாணம் மண்டபம் புக் செய்கிறார்களோ இல்லையோ திருமணம் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அதற்கு முன்பே மாதம்பட்டி ரங்கராஜிடம் தேதி இருக்கிறதா என்று கேட்டுக்கொள்வார்கள்.

அந்த அளவிற்கு பிரபலமான நபர் இவர் என்று கூறியிருக்கின்றனர் என்று மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார் வெங்கடேஷ் பட்.

Exit mobile version