எல்லோருக்கும் இப்படிப்பட்ட மருமகன் வாய்த்த பிரச்சனையே இல்லை மாமியாருக்கு வாழ்த்துச் சொன்ன விக்னேஷ் சிவன்!

 

தமிழ் திரையுலகில் நீண்ட நாட்கள் காதலித்து கடைசியாக மிகவும் பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

இவர்களின் திருமணம் மிகவும் ஆடம்பரமான முறையில் நடந்தது அனைவருக்கும் தெரியும். இந்த திருமணத்தை குத்தகைக்கு எடுத்தது போல நெட்ஃப்ளிக்ஸுக்கு வீடியோக்களை பதிவு செய்து வெளியீடு விடுவதற்காக பெரும் தொகை  பெற்றுக் கொண்டார்கள் இந்த தம்பதியினர்.

அதுக்குப் பிறகு இவர்கள் இரண்டு ஹனிமூன் சென்று உள்ளார்கள். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை அப்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த வண்ணம் உள்ளார்கள்.

 மேலும் இவர்கள் திருமணம் முடிந்தபின் திருப்பதி சென்ற போது காலில் செருப்பு அணிந்து இருந்தார்கள் என்ற சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்தது. அதற்கு மிகவும் அழகான முறையில் இவர்கள் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்ட விதம் அவர்களது பெருந்தன்மையை வெளிப்படுத்தியது.

 எங்கு சென்றாலும் தன் மனைவியின் கையை விடாமல் பிடித்து கொண்டு செல்லும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை விட வயதில் சிறியவர்.

திருமணத்துக்கு முன்பே நயன்தாராவை பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்த இருந்தது.சிம்பு, பிரபுதேவா என்று இருவரோடும் இணைந்து பேசியதோடு சில புகை படங்களும் வெளிவந்தது. இவர்கள் இருவருக்கும் டேக்கா கொடுத்து விட்டு கடைசியாக இவர் விக்னேஷ் சிவனை மணந்துகொண்டார். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் சிம்பு என்ற கருத்து இன்று வரை திரையுலகில் உள்ளது.

 கேரள மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாராவின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்  இயக்குனர் விக்னேஷ் சிவன். அன்புள்ள ஓமனா குரியன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் .நீங்கள் எனது மற்றொரு அம்மா  அன்பான தூய்மையான ஆத்மாவான இதயத்தை பார்க்கிறேன் நீங்கள் நல்ல ஆரோக்கியம் அமைதி மகிழ்ச்சியுடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் போட்ட வாழ்த்துச் செய்தி தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இவரைப் போல மருமகன் இருந்தால் எந்த மாமியாருக்கும் கவலை இல்லை என்று கூறுவது போல் இவர் வாழ்த்து அனுப்பி இருப்பது உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version