சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் அந்த நடிகையா இது..? – வைரல் போட்டோஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல சீரியல் நடிகை வித்யா வினு மோகன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் பிறந்தவர் நடிகை வித்யா வினு மோகன்.

மலையாளத்தில் வெளியான வெக்கேஷன் என்ற திரைப்படத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் தண்டாயுதபாணி என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவருடைய பெயர் சிவானி ஸ்ரீ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தமிழ் மலையாளம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை தமிழில் ஆறாவது வனம், கருவறை, 2012 ஆம் ஆண்டு வெளியான அகிலன், காதல் பாதை, நேர் எதிர், மற்றும் உழைக்கும் பாதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படி இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் ஒதுங்கியவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான வள்ளி என்ற சீரியலில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட 1961 எபிசோடுகள் ஓடிய இந்த சீரியலில் 235 வது எபிசோடில் இருந்து இவர் நடிக்க தொடங்கினார். இதற்கு முன்பு இவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடிகை உமா நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சீரியல் மட்டும் இல்லாமல் சினிமா வாய்ப்புக்காகவும் முயற்சி செய்து வரும் இவர் தமிழை விட மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வினு மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யா இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை வித்யா வினு மோகனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version