யோகி பாபுவுக்கு பரிசளித்த தளபதி விஜய் …என்ன பரிசு தெரியுமா?

தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் இல்லாத படமே இல்லை என்று கூறும் அளவுக்கு பல முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களோடு இணைந்து தனது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் காமெடியனாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளிவந்த மண்டேலா திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை தந்ததோடு ரசிகர்கள் விரும்பக்கூடிய கதாநாயகர்களின் வரிசையிலும் இவர் இடம் பிடித்து விட்டார்.

 இந்த படத்தில் இவர் சலூன் கடை நடத்தக்கூடிய வராக வந்தார். மேலும் இந்த படத்திற்கான வசனம் மற்றும் சிறந்த இயக்குனர் காண தேசிய விருதுகளை இந்த படம் பெற்றது.

 இதனை அடுத்து இவர் பொம்மை நாயகி மற்றும் மலை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பொம்மை நாயகி படத்தை பா ரஞ்சித் தயாரித்துள்ளார்.

 படு பிஸியாக இருக்கும் இவர் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவரின் கிரிக்கெட் திறமையை சைலன்டாக கவனித்த தளபதி விஜய் இவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்ட்டாக அனுப்பி இருக்கிறார்.

பத்தாயிரம் ரூபாய் விலையுள்ள இந்த கிரிக்கெட் பேட்டை பிடித்த வண்ணம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நெட்டிசன்கள் பதிவிட்டிருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என்று ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவர் 20 20 கிரிக்கெட் விளையாட எப்போது களம் இறங்குவார் என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …