உடல் எடையை குறைத்தவர்களின் பட்டியலில் தற்போது விஜயசேதுபதியும் இணைந்து விட்டாரா? விவரம் உள்ளே…!!

மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக இருக்கும் விஜயசேதுபதி தமிழகத்தில் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பும் கதாநாயகர்களில் ஒருவர் என்று கூறலாம். எப்போதும் எளிமையாக காணப்படும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமானதில் ஆச்சரியம் இல்லை.

பொதுவாக தமிழக திரை உலகில் முன்னணி நாயகர்களின் வரிசையில் இருக்கக்கூடிய இவர் எந்த ஒரு ஈகோவோ, இமேஜோ பார்க்காமல் அது எந்த வகையான ரோலாக இருந்தாலும் ஏற்று நடிப்பதில் வல்லவர்.

அந்த வரிசையில் இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல், ஆன்ட்டி ஹீரோவாகவும் பல படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 இதற்கு உதாரணமாக விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தையும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தையும் நாம் கூறலாம்.

 இவர் தமிழ் படத்தோடு நின்று விடாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து படங்களிலும் எத்தகைய கேரக்டர்கள் கிடைத்தாலும் அதை ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் களம் இறங்கி கோல் அடிப்பார்.

 இதுவரை அவர் நடித்த படங்கள் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான உடல் வாக்கை நாம் பார்த்திருக்கலாம். இவரும் மற்ற நடிகர்களைப் போல ஜிம்முக்கு செய்வதோ, எக்சசைஸ் செய்வதோ என்று அதிகமான பயிற்சிகளில் ஈடுபட மாட்டார் என்பது இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

 இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய செல்பியை பார்த்து பலரும் அதிர்ந்து இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த புகைப்படத்தில் இவர் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக காட்சி அளித்திருப்பது தான்.

 மேலும் ஸ்லிம்மாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கூடுதல் இளமையோடு இவர் இருக்கிறார் என்று கூறும் அளவுக்கு அந்த செல்பி இப்போது வைரல் ஆகிவிட்டது.

 தற்போது விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து விடுதலை ஹிந்தியில் ஜவான்,காந்தி டாக்ஸ் உள்ளிட்ட பட படங்கள் கைவசம் உள்ள நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் செல்பியால் எந்த படத்திற்காக இவர் உடல் மெலிந்து இருக்கிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version