Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஏழைகள் என்றால் எளக்காரமா..? விஜய் டிவி ஜாக்லின் செய்த செயல் விளாசும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததன் மூலமாக மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்படுபவர் தான் வி.ஜே ஜாக்லின் .

இவர் முதன் முதலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

விஜய் டிவி ஜாக்குலின்:

கரகரப்பான குரலால் தொகுப்பாளினியாக மக்களின் மனதை கவர்ந்த இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்து வெள்ளி திரையில் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு பெரிதாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொலைக்காட்சியிலும் வாய்ப்புகள் மந்தம் தட்ட நிலவியது .

இதனிடையே தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நடித்தார். ஆனால் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரும் புகழும் கொடுக்கவில்லை .

இதை அடுத்து சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

இந்நிலையில் ஜாக்குலின் செய்துள்ள ஒரு விஷயம் தற்போது ஒட்டுமொத்த மக்களையும் வெறுப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

ரூ. 500 பெட் கட்டிய ஜாக்குலின்;

அவரின் செயல் பாமர மக்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. அவரின் இந்த செயலை பலர் திட்டி தீர்த்து வருகிறார்கள் அது என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அதாவது கண்டென்ட் & வியூஸ்க்கு என்னா வேணாலும் பண்ணுவாங்க போல….என்று தான் தோன்றுகிறது. Swiggi, Zomoto ல ஒரே நேரத்துல ஆர்டர் போட்டு, யார் முதல்ல டெலிவரி பண்றாங்களோ, அவங்களுக்கு 500 ரூபா தர்ற மாதிரி கேம் வச்சி விளையாடுகிறார் ஜாக்குலின் .

பணம் ஒருத்தருக்கு, விளையாட்டு பொருளா இருக்குறதும், இன்னொருத்தர் அதுக்காக நாயா, பேயா ஓடுறதும் இந்த வீடியோ பாத்தா புரியும்..‌

Swiggy ய விட ஒரு செகண்ட் ZOMOTO காரர் முதல்ல வந்ததால, அவருக்கு 500 ரூபா கொடுக்கனும்னு சொன்னப்ப, அவர் சொன்ன பதில்தான் இங்க முக்கியமானது..

மனதை சிலிர்க்க செய்த ZOMOTO ஊழியர்:

நான் பேச்சலர், பின்னாடி வந்தவர், ஃபேமிலி மேனா கூட இருக்கலாம், அவருக்கு குடுங்க னு சொன்னார்.. இல்ல இல்ல, நீங்க தான் முதல்ல வந்தீங்க, உங்களுக்கு தான் குடுக்கனும்னு சொன்னப்ப, இல்ல நான் பக்கத்துல இருந்து தான் வநதேன்.

அதனால சீக்ரம் வந்துட்டேன்…அவர் தூரமா இருந்து வந்திருப்பார்.. அதனால லேட் ஆகிருக்கும்.. அவருக்கே குடுங்க னு சொல்லிட்டு போவார்..

சரி னு Swiggy காரர்க்கு குடுக்கபோனா, ” சிக்னல்ல எதும் மாட்டிருந்தன்னா, நான் வர்றதுக்கும் இன்னும் லேட் ஆகிருக்கும்.

Zomoto காரரோட பெருந்தன்மைனால தான் , இது எனக்கு கிடைச்சிருக்கு னு க்ரெடிட்ட Zomoto காரருக்கு குடுத்துட்டு, 500 வாங்கிப்பார்.

பெருந்தன்மையான மனசுக்கு குவியும் பாராட்டுகள்:

இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த Zomoto காரர், நான் Zomoto ல வேலை செய்றது என் வீட்டுக்கு தெரியாது னு சொல்லி, அது தெரியக்கூடாதுனு ஹெல்மெட் கழட்டாமலேயே பேசுவார்..

பெரிய ஐடி கம்பெனில வேலை அல்லது பெரிய தொழிற்சாலைல வேலை செய்றேன்னு கூட வீட்ல சொல்லிட்டு இப்டி அவர் இருக்கலாம்.

அவருக்குமே பணம் அத்தியாவசியமா தேவைபடுற ஒண்ணா இருக்குறதால தான், வீட்ல பொய் சொல்லிட்டு Zomoto ல வேலை செய்றார்..

இப்படிப்பட்ட சூழல்லயும், அவரால தனக்கு பின்னாடி வந்த Swiggy காரர பத்தி யோசிக்க முடியுது.. ரொம்ப அசால்ட்டா, 500 ரூபாய இன்னொருத்தருக்கு குடுத்துருங்கனு சொல்ல முடியுது.

வாழ்க்கையில் நெறய அடிபட்டுருந்தால் தான் இப்டி அடுத்தவனோட வலிய ஈசியா புரிஞ்சிக்கிற தன்மையே வரும்.

பணம் ஈசியா கிடைச்சிட்றதாலதான் என்னவோ, கடைசி வரை பணக்காரங்களுக்கு இந்த புரிதல் வரமாட்டேங்குது‌.‌..

பணக்கார புத்தியை காட்டிய ஜாக்குலின்:

எளிய மக்கள்கிட்ட பேசுங்க, அவங்கள விட பெரிய புத்தகம், நூலகம், இல்ல இல்ல, பல்கலைகழகம் எதும் இல்ல! என நெட்டிசன்ஸ் மஹாலக்ஷ்மி என்பவர் இந்த வீடியோவுடன் தன்னுடைய கருத்தை கூற இந்த பதிவு இணையத்தில் வைராகி வருகிறது.

பணத்தின் மதிப்பு தேவை அறிந்தும் கூட பின்னால் வந்த Swiggy காரருக்கு அந்த 500 ரூபாய் கொடுக்க சொல்லும் அந்த மனதை பலரும் பாராட்டி வருகிறார்கள் .

அது மட்டும் இல்லாமல் 500 ரூபாய் பணத்துக்காக நாயா பேயா அலையும் இந்த Swiggy மற்றும் Zomoto ஊழியர்களுக்கு மத்தியில் பணத்தை ஒரு விளையாட்டு பொருளாக வைத்து விளையாடும் ஜாக்லின் போன்ற பணக்காரர்களுக்கு அதன் மதிப்பு தெரிய வாய்ப்பே கிடையாது.

பண தேவை இருந்தும் கூட அதை பின்னாடி வந்த Swiggy ஊழியரின் நிலைமை அறிந்து கொடுக்க வந்த அந்த மனதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

http://

கண்டென்ட் & வியூஸ்க்கு என்னா வேணாலும் பண்ணுவாங்க போல.🤧

Swiggi, Zomoto ல ஒரே நேரத்துல ஆர்டர் போட்டு, யார் முதல்ல டெலிவரி பண்றாங்களோ, அவங்களுக்கு 500 ரூபா தர்ற மாதிரி கேம்..

பணம் ஒருத்தருக்கு, விளையாட்டு பொருளா இருக்குறதும், இன்னொருத்தர் அதுக்காக நாயா, பேயா ஓடுறதும் இந்த வீடியோ… pic.twitter.com/vjn9y1I1Bz
— Dr.Aravind Raja (@AravindRajaOff) June 29, 2024

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version