வரிசையா மூணுமே காப்பி..! – ஒன்னு கூட சொந்தமா யோசிக்கலையா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தெலுங்கில் வாரசுடு என்றும் தமிழில் வாரிசு என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது இந்த திரைப்படம்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. முன்னதாக நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்கிறோம் பேர்வழி என்ற பெயரில் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாத அளவுக்கு இது தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது படக்குழு.

இந்த காலகட்டத்தில் ரசிகர்கள் வெளியிடும் Fan Made போஸ்டர்களை Official போஸ்டர் ரேஞ்சுக்கு இருக்கும் போது இப்படி Official பேனரில் வெளியாகும் போஸ்டர் இவ்வளவு மோசமாகவா இருப்பது..? பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

அந்த வகையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று வெளியான முதல் போஸ்டரில் நடிகர் விஜய் கோட் சூட்டு சகிதமாக நாற்காலி ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் விடப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர் கபாலி திரைப்படத்தின் போஸ்டர் ரீ-கிரியேட் செய்தது போல் இருக்கிறது என்று கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது போஸ்டர் வெளியானது இதில் நடிகர் விஜய் மாட்டு வண்டியில் படுத்துக்கொண்டு வானத்தை பார்த்தபடி இருக்கும் படி இருந்தது இதனை சந்திரமுகி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்ட்ரியாகும் காட்சி போல இருக்கிறது என்று கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து மூன்றாவது போஸ்டர் வெளியானது இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கேஜிஎப் 2 திரைப்படம் கட்சியில் இருந்து ரீ-கிரியேட் செய்தது போல இருக்கிறது..! ஆக சொந்தமாக எதையும் யோசிக்கவில்லை.. என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

இப்படி ரசிகர்களின் சலசலப்புக்கு உள்ளாகி உள்ளது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள். சமீபத்தில், பீஸ்ட் திரைப்படத்தில் வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் பொழுது சல்யூட் அடித்த நடிகர் விஜயின் காட்சிகள் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டன.

இதனால் பிரபல ஊடகங்களில் இந்தியாவில் அதிக ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில் நடிகர் விஜயின் இந்த படமான வாரிசு படத்தில் வெளியான மூன்று போஸ்டர்கலுமே ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருவது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்.. ஒரு நடிகன் என்னத்தான் செய்ய முடியும் உட்கார்ந்தால் காப்பி.. நின்றால் காப்பி.. படுத்தால் காப்பி.. ஓடினால் காப்பி.. துப்பாக்கி எடுத்தால் காப்பி.. துப்பாக்கியை எடுக்கவில்லை என்றால் காப்பி.. இப்படியே சொல்லிக்கொண்டிருந்தாள் சினிமாவிலிருந்து ஒரு நடிகன் என்னதான் செய்ய முடியும் அல்லது இயக்குனர் தான் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …