“என் குடும்பமே விஜயகாந்துக்கு நன்றி கடன் பட்டிருக்கு..” கண்ணீருடன் ரகசியம் உடைத்த தனுஷின் சகோதரி..!

“என் குடும்பமே விஜயகாந்துக்கு நன்றி கடன் பட்டிருக்கு..” கண்ணீருடன் ரகசியம் உடைத்த தனுஷின் சகோதரி..!

தமிழகத்தையே தற்போது சங்கடத்தில் தள்ளி இருக்கும் கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து திரை உலகத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜயகாந்த்-க்கு நடிகர் தனுஷ் குடும்பமே நன்றி கடன் பட்டிருப்பதாக  வெளி வந்திருக்கும் செய்தியானது தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திரையுலகில் ஒரு சகாப்தமாக வாழ்ந்த கேப்டன் சினிமாவில் பல காலகட்டங்களில் போராட்டங்களை சந்தித்து தனது உழைப்பால் உயர்ந்த, உன்னத குணம் படைத்தவர். புரட்சிக் கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் இன்று நம்மோடு இல்லை.

எந்தவிதமான சூழ்நிலையில் இருந்தாலும், அனைவருக்கும் உதவக் கூடிய குணம் கொண்ட விஜயகாந்தை “வீரம் விளைஞ்ச மண்ணு” என்ற படத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கியிருக்கிறார்.

இதனை அடுத்து இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கும் விஜயகாந்த் இடையில் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. மேலும் கஸ்தூரிராஜாவின் இரண்டு மகள்களும் என்று மருத்துவர்களாக திகழ்வது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அப்படி கஸ்தூரி ராஜாவின் முதல் மகள் பல் மருத்துவராக இருக்கிறார். இவரது இரண்டாவது மகள் கார்த்திக் இன்று மகப்பேறு மருத்துவராக இருக்க விஜயகாந்த் தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த விஷயத்தை இயக்குனர் கஸ்தூரிராஜா ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். தனது மகளின் டாக்டர் கனவை நிறைவேற்றியது விஜயகாந்த் என்று கூறியிருக்கிறார்.

மேலும் நுழைவுத் தேர்வு எழுதியும் கட் ஆப் மார்க் குறைவான மதிப்பெண் பெற்றிருந்த கார்த்திகா தேவி இனி டாக்டராக முடியாது என்ற விரக்தியில் வீட்டில் அழுது கொண்டே இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் வேறொரு விசயமாக கஸ்தூரிராஜா வீட்டுக்கு வந்திருந்த விஜயகாந்த், கார்த்திகா அழுவதை பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்க கார்த்திகாவுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை கட் ஆப் மார்க் குறைவாக எடுத்திருக்கிறார் என்று கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையின் உடையாருக்கு போன் செய்து பேசிய விஜயகாந்த் உரிய சீட்டை பெற்றுத் தந்திருக்கிறார். இந்நிலையில் கார்த்திகாவை நேரில் வரச் சொல்லி அவருக்கு மருத்துவம் படிக்க சீட் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பலன் கருதாது உதவி செய்யக்கூடிய விஜயகாந்தை யாரும் மறக்க முடியாது. இதை அடுத்து இவரது குடும்பத்திற்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம் என்று பேசிய பேச்சு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

About Brindha

Avatar Of Brindha

Check Also

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

திரை உலக வட்டாரத்தை திருப்பி போடக்கூடிய வகையில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை கடுமையான அதிர்வலைகளை சினிமாத்துறை இடையே …