அஜீத்தை யாருன்னே தெரியலையே..! - அசிங்கப்படுத்திய தனுஷ் பட வில்லன்..!

அஜீத்தை யாருன்னே தெரியலையே..! – அசிங்கப்படுத்திய தனுஷ் பட வில்லன்..!

நடிகர் விஜய், நடிகர் அஜீத்குமார் இருவருமே சமகாலத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். அதே போல் இப்போது இருவருமே தமிழ் சினிமாவில் டாப் லெவல் நடிகர்களாக இருந்து வருகின்றனர். அதுவும் அஜீத்குமாரை காட்டிலும் விஜய் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இப்போது அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விஜய், கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களின் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே கேப்டன் மில்லர் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்துக்கு யு மற்றும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள வில்லன் நடிகர் எட்வர்ட், படத்தின் பிரமோ நிகழ்ச்சிக்காக சில நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார். இவர் ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார். நேர்காணலில் பங்கேற்ற எட்வர்ட்டிடம் சில புகைப்படங்களை காட்டி யார் எனக் கேட்டுள்ளனர்.

அப்போது விஜய் புகைப்படத்தை காட்டியவுடன் இவர் விஜய், இந்தியா வந்த போது இவரது படத்தை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அடுத்து ரஜினி படத்தை காட்டியவுடன், ஓ மை தலைவா என்று கூறியிருக்கிறார். அடுத்து அஜீத்தை காட்டியவுடன், ஓ இது எனது பேவரிட் நடிகர் கமல்ஹாசன் என கூறியிருக்கிறார்.

அஜீத் படத்தை பார்த்து, கமல் என்று சொன்னதால் இப்படி அஜீத்தை தனுஷ் பட வில்லன் அசிங்கப்படுத்தி விட்டாரே, விஜயை தெரிந்தவருக்கு, அஜீத்தை தெரியலையே என பலரும் சோஷியல் மீடியாவில் அந்த வீடியோ கிளிப்சை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version