கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷால் உடன் மாசாக இணைந்த உதயநிதி… போஸ்டர் உடன் வெளிவந்த அப்டேட்…!!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் செல்ல அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி படத்தில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இணைந்து இருக்கிறார்.

 வித்தியாசமான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தொடக்கத்தில் வெளிவந்த எஃப் ஐ ஆர் திரைப்படம் மிகச்சிறப்பான முறையில் ஓடியது.

 இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் என்பவர் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்திருந்தார்கள்.கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான எந்த திரைப்படம் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் மூவிஸ் மூலம் வெளியிடப்பட்டது .

பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை தந்த வெற்றி படமாக இது விஷ்ணு விஷாலுக்கு இப்படம் அமைந்தது. இதனை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

 இந்தப் படத்தை இயக்கி வரக்கூடிய செல்வ அய்யாவு எந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமியை தந்திருக்கிறார். மேலும் படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகரான ரவி தேஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 எனவே இந்த திரைப்படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் தற்போது இந்த படத்தை வெளியிடக்கூடிய உரிமையை உதயநிதி ஸ்டாலினின் மூவி நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளது.

 மேலும் இப்படம் மத்தி குஸ்தி என்கிற பெயரில் தெலுங்கிலும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தக் கூடிய இந்த படம் அதிகளவு வசூலை வாரி கொடுத்து விஷ்ணு விஷாலுக்கு மேலும் நல்ல பெயரை பெற்று தரும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version