இதோட விட்டுருங்க சேனல் பார்த்துப்பாங்க..! யாரு முன்னாடியும் தலை குனிய மாட்டேன்.. பதிலடி கொடுத்த வி.ஜே பிரியங்கா.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்கா வெகு வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சில காலங்களாக அவர் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒருவராக மாறி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் குக்காக கலந்து கொண்டார் பிரியங்கா. அந்த சமயங்களில் அவர் தொடர்ந்து தொகுப்பாளராக அங்கு இருந்த மணிமேகலைக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதோட விட்டுருங்க

இதனை அடுத்து பொருத்து பொருத்து பார்த்த மணிமேகலை ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் குக் வித் கோமாளி இருந்து வெளியேறினார். வெளியான பிறகு அவர் ஏன் குக் வித் கோமாளியில் இல்லை என்று ரசிகர்களுக்கு தெரியாத காரணத்தினால் அவர்கள் தொடர்ந்து மணிமேகலைக்கு இது குறித்து மெசேஜ் செய்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் மணிமேகலை. அதில் கூறும் பொழுது குக் வித் கோமாளியில் குக்காக இருக்கும் தொகுப்பாளர் ஒருவர் என்னை என் வேலையை சரி வர செய்ய விட மாட்டேங்கிறார் எனது சுயமரியாதை இழந்து என்னால் அங்கு இருக்க முடியாது எனவே நான் வந்து விட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் மணிமேகலை.

சேனல் பார்த்துப்பாங்க

இந்த நிலையில் பலரும் வி.ஜே பிரியங்கா குறித்து எதிர்மறையான கருத்துக்களை பேசத் தொடங்கினர். மேலும் வி.ஜே பிரியங்காதான் அன்று குக் வித் கோமாளியில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி மணிமேகலையை திட்டியதாகவும் அதனால்தான் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் இவர்கள் கூற துவங்கினார்கள்.

இந்த நிலையில் இதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்து வந்தார் வி.ஜே பிரியங்கா. இந்த நிலையில் வி.ஜே பிரியங்காவை சுற்றியுள்ள வட்டாரத்தினர் கூறும் பொழுது அப்படிப்பட்ட ஆளெல்லாம் வி.ஜே பிரியங்கா கிடையாது.

பதிலடி கொடுத்த வி.ஜே பிரியங்கா

அவர் விஜய் டிவியில் நிறைய ஆட்களை மேலே உயர்த்தி வைத்திருக்கிறார் வி.ஜே பிரியங்காவை பற்றி தெரியாமல் இவர்களெல்லாம் இப்படி பேசிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து பதில் அளிக்குமாறு நான் வி.ஜே பிரியங்காவை கேட்டேன்.

ஆனால் அவர் இந்த விஷயங்களை எல்லாம் சுத்தமாக கண்டு கொள்ளவே இல்லை அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்து வருகிறார். மேலும் இது குறித்து விஜய் டிவி நிறுவனத்திடம் கூறிவிட்டேன். அவர்கள் இனி பார்த்துக் கொள்வார்கள் என்று கேஷுவலாக கூறிவிட்டார் என்று கூறுகின்றனர்.

About Jiraya

Check Also

அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?

சமூக வலைத்தளங்களில் எந்த பக்கத்தை எடுத்தாலும் விஜே மணிமேகலை தன்மானம் தான் பெரிது காசு பெரிதல்ல என்று பிரியங்காவின் மீது …

Exit mobile version