VJ ரம்யா (Vj Ramya) என அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன், முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவர் தஞ்சாவூரில் பிறந்தவர். அப்பா பெயர் சுப்ரமணியன். சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் சினிமாக்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆடிட்டர் அபர்ஜித் ஜெயராமன் என்பவரை 2014 ம் ஆண்டில் திருமணம் செய்தார். அடுத்து, 2015ம் ஆண்டில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
Vj Ramyaகடந்த 2004ம் ஆண்டில் சென்னையில் நடந்த மிஸ் சென்னை அழகி போட்டியில் ரம்யா பங்கேற்றார். அதன்பின், தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறினார். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு? உங்களில் யார் அடுத்த பிரபு தேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல பிரபலமான டிவி நிகழ்ச்சிகளை, ரம்யா மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
கடந்த 2007 ம் ஆண்டில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த மொழி படத்தில் ரம்யா அறிமுகமானார். படத்தின் ஆரம்ப காட்சியில், பண்ணையாரின் மகளாக கோவில் படிக்கட்டுகளில் ஏறிவரும் காட்சியில் நடித்திருப்பார். அடுத்து, 2015 ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில், துல்கர் சல்மான் தோழியாக அனன்யா என்ற கேரக்டரில் ரம்யா நடித்தார். அதே ஆண்டில் இவர் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளராகவும் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vj Ramyaரம்யா, சென்னையில் பிறந்தவர். பத்மா சேஷாத்திரி பாலபவனில் பத்தாம் வகுப்பு முடித்தார். ஆதர்ஷ் வித்யாலயாவில் 11, 12 வகுப்புகளை நிறைவு செய்தார். சென்னை எம்ஓபி வைணவ மகளிர் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசனில் இளம்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.
மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்கத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில், ரம்யா நடித்திருக்கிறார்.
வி ஜே ரம்யா, அழகுத் தமிழில் பேசக்கூடியவர். டிவி நிகழ்ச்சிகளை மிக அழகாக, தொகுத்து வழங்கும் திறமையாளர். அதே போல், அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் துணை நடிகை கேரக்டர்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்த சின்ன சின்ன நடிப்பிலும் கூட, ரம்யா ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல நடிப்பை தந்திருக்கிறார்.
பேசுகிற தமிழில் மட்டுமின்றி, மிக அழகான தோற்றம் கொண்டவராக இருப்பதால், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா, அவ்வப்போது, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.
அந்த வகையில் மாடர்ன் டிரஸ் மற்றும் புடவைகளில் அம்மணி அசத்தலான போஸ் தருகிறார். இவரது புகைப்படங்களுக்கு, லைக்ஸ் தெறிக்கிறது. சமீபத்தில், இவர் அப்டேட் செய்துள்ள இந்த புகைப்படங்கள், வைரலாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.