இதனால் தான் நிரூப்-உடன் ப்ரேக் அப் செய்தார் பிக்பாஸ் அபிராமி..! – வைரலாகும் தகவல்..!

நடிகை பிக்பாஸ் அபிராமி மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் நிரூப் ஆகியோர் முன்னாள் காதலர்கள் என்பது தெரிந்த விஷயம். இந்நிலையில் இவருடைய பிரிவுக்கு என்ன காரணம் என்ற ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்த விவகாரத்தில் பிக்பாஸ் போட்டியிலேயே பெரிய சர்ச்சையாக கிளப்பினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் புது விதமான டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் செலிபிரிட்டி VS பிரஸ்மீட் என்ற பெயரில் ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் செலிப்ரிட்டி நிருப்பிடம் கேள்வி எழுப்பிய நடிகை அபிராமி வெங்கடாச்சலம் உங்களுடைய முன்னாள் காதலியை சந்தித்த போது உங்களுடைய அந்த நிமிடம் எப்படி இருந்தது என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த நிரூப் அந்த முன்னாள் காதலியே நீங்கள்தான் என்று கூறியது சக போட்டியாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் உங்களை இங்கு பார்த்த பொழுது நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது.

ஆனால், என்னால் எதுவும் பேச முடியவில்லை இனி வரப்போகும் நாட்களில் பேச முடியும் என நினைக்கிறேன் என்று கூறினார். அதற்கு அபிராமி என்னையும் உங்களையும் வைத்து பல்வேறு விதமான மீம்களைப் போட்டு வருகிறார்கள்.

அதற்கு விளக்கம் அளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதுகுறித்து பேசிய இவர் உங்களையும் என்னையும் சேர்த்து வைத்து வரும் மீம்களை பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. அது ஒரு பெரிய பிரச்சினையே கிடையாது என்று கூறினார்.

இந்த டாஸ்க் முடிந்த பிறகு சக போட்டியாளர்கள் எதற்காக இருவரும் ப்ரேக்அப் செய்து கொண்டார்கள் என்று வினவினார்கள். அப்பொழுது நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம் பிறகு ஒரு கட்டத்தில் டீசண்டாக பேசி பிரிந்து விட்டோம் எங்களைப் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் இணையத்தில் வந்து கொண்டிருக்கின்றது.

இதைப் பற்றி பேசுவதால் எந்த பயனும் கிடையாது என்பது போல சமாளித்தார் நிரூப். இந்நிலையில் எதனால் இருவரும் பிரிந்தார்கள் என்ற ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது அபிராமியை காதலித்து வந்த நிரூப் அதேசமயம் நடிகை யாஷிகா ஆனந்தையும் திருட்டு தனமாக காதலித்து வந்ததாகவும் இதனை அறிந்து கொண்ட அபிராமி அவரை பிரிந்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.

மேலும், பிரபல ஹோட்டல் ஒன்றில் நடிகை யாஷிகா ஆனந்த்திற்கு நிரூப்  லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …