
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி,கச்சா எண்ணெய் விலை உயர்வு,விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் நிலை என பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் செலவை குறைக்கக்கூடிய முதல் 10 பெட்ரோல் வகை கார்களை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வரிசைப்படுத்தியுள்ளது. அது குறித்து இங்கு காணலாம்...
10.மாருதி சுசூகி பலேன்னோ:
பொதுவாக நடுத்தர வர்க்கத்தை கணக்கிட்டு கொண்டு வரப்பட்ட மாடல் மாருதி சுசூகி பலேன்னோ. இதன் ரூ.5.38 லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் இருந்து சந்தையில் கிடைக்கிறது. 84PS பல்லேன்னோ லிட்டருக்கு 21.4 கி.மீட்டரும், 102PS சக்தி கொண்ட பல்லேன்னோ லிட்டருக்கு 21.1கிமீ தருகிறது.
9.மாருதி சுசூகி சியாஸ்:
புதிய மாடலான மாருதி சுசூகி சியாஸ் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. நல்ல வடிவமைப்பு, பல சிறப்பம்சங்கள் என வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. பெட்ரோல் மேனுவல் மாடலானது லிட்டருக்கு 21.56 கிமீ மைலேஜையும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.28 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.8.19 லட்சம் முதல் ரூ.10.97 லட்சம் வரையிலும் சந்தையில் கிடைக்கிறது.
8.மாருதி சுசூகி ஸ்விப்ட் மற்றும் டிசைர்:
பல்வேறு சிறப்பம்சங்களால் மாருதி சுசூகி ஸ்விப்ட் மற்றும் டிசைர் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் கார் மாடல்களாக திகழ்கின்றன. ஸ்விப்டின் விலை ரூ.4.99 லட்சத்தில் இருந்தும், டிசைர் விலை ரூ.5.6 லட்சத்தில் இருந்தும் தொடங்குகிறது. லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் தரும் இந்த மாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
7. ஹூண்டார் இயான் 0.8 லிட்டர்:
புத்தம் புதிய இயானில் 56 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். 814 சிசி கொண்ட 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், லிட்டருக்கு 22.03 கிமீ மைலேஜ் தரும் என்று ஏஆர்ஏஐ சான்று கூறுகிறது. மேலும், ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடல்களிலும் இயான் கிடைக்கிறது.
6.மாருதி சுசூகி செலிரியோ:
மாருதி சுசூகி செலிரியோ மாடல் 68பிஎஸ் வரை பவரை வெளிப்படுத்துகிறது. ரூ.4.21 லட்சத்தில் இருந்து சந்தையில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தருகிறது.
5.டாடா டயாகோ:
டாடா டயாகோ மாடல் பட்ஜெட்டிற்கு ஏற்ற கார் வகையாக உள்ளது. டயாகோ மாடல் 85 பிஎஸ் வரை பவரை வெளிப்படுத்துகிறது. ரூ.3.35 லட்சத்தில் இருந்து சந்தையில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏஆர்ஏஐ சான்றின்படி லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தருகிறது.
4.மாருதி சுசூகி ஆல்டோ K10
கொஞ்சம் பெரியதாக தோற்றமளிக்ககூடிய மாருதி சுசூகி ஆல்டோ K10 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 68 பிஎஸ் வரை பவரை வெளிப்படுத்துகிறது. ரூ.3.35 லட்சத்தில் இருந்து சந்தையில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏஆர்ஏஐ சான்றின்படி லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தருகிறது
3.மாருதி சுசூகி ஆல்டோ 800
மாருதி சுசூகி ஆல்டோ 800 அனைவராலும் விரும்பப்படும் மாடல் ஆகும். ரூ.2.56 லட்சத்தில் இருந்து சந்தையில் கிடைக்கிறது. லிட்டருக்கு 24.7 கிமீ மைலேஜ் தருகிறது
2.டட்சன் ரெடி கோ:
54 பிஎஸ் வரை பவரை வெளிப்படுத்தும் ஒருவகையில் 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏஆர்ஏஐ சான்றின்படி லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தருகிறது. 68பிஎஸ் வகை, 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜ் தருகிறது
1.ரெனால்ட் க்விட்:
ரெனால்ட் க்விட் மாடலின் விலைக்கேற்ற வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புற தோற்றத்தால் சந்தையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 0.8 மற்றும் 1.0 லிட்டர் என்ஜினில் கிடைக்கிறது. மேனுவல் மாடலானது லிட்டருக்கு 23.01 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 24.04 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது