கடந்த ஆண்டு "பிரேமலு" படத்திற்கு பிறகு மமிதா பைஜு தென்னிந்திய ரசிகர்களின் க்ரஷ்ஷாக மாறினார். தற்போது, 2024 ஆம் ஆண்டின் க்ரஷ்ஷாக கோலிவுட்டின் புதுவரவு கயாடு லோஹர் அதிரடியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான "டிராகன்" திரைப்படம் இரண்டு வாரங்களில் 110 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் பல படங்கள் வெளியானாலும், "டிராகன்" திரைப்படம் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த வாரமும் "டிராகன்" திரைப்படம் வசூல் வேட்டை தொடரும் என்றும், கயாடு லோஹரின் அழகை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"கீதா கோவிந்தம்" படத்தில் ராஷ்மிகா மந்தனா "இன்கேம் இன்கேம் காவாலே" பாடலில் வரும் ஒரு சில நொடி அசைவில் எப்படி நேஷனல் க்ரஷ்ஷாக மாறினாரோ, அதே போல தற்போது கயாடு லோஹர் "டிராகன்" படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் க்ரஷ்ஷாக மாறியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவையே பின்னுக்கு தள்ளி கயாடு லோஹர் இந்த ஆண்டின் க்ரஷ்ஷாக உருவெடுத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரதீப் ரங்கநாதனின் "லவ் டுடே" திரைப்படம் 100 கோடி வசூல் செய்த நிலையில், "டிராகன்" திரைப்படம் 13 நாட்களில் 120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் 37 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இந்த திரைப்படம், குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வசூல் சாதனை படைத்தது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனுபமா பரமேஸ்வரன் மற்றொரு கதாநாயகியாக நடித்திருந்தாலும், ரசிகர்கள் கயாடு லோஹரை "வழித்துணையே" என கொண்டாடி வருகின்றனர். இந்த வாரமும் "டிராகன்" திரைப்படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடினால், 150 கோடி வசூலை கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்துள்ளன.
கயாடு லோஹரை இளைஞர்கள் பலரும் க்ரஷ்ஷாக கொண்டாடி வரும் நிலையில், கயாடு லோஹர் சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பேசியுள்ளார்.
அப்போது தளபதி விஜய் தான் தனது செலிபிரிட்டி க்ரஷ் என கயாடு லோஹர் கூறியிருக்கிறார். இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் கயாடு லோஹரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
#KayaduLohar என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் கில்லி படத்தில் இடம்பெற்ற "அப்படிப்போடு" பாடலுக்கு கயாடு லோஹர் மாணவர்களுடன் நடனமாடிய வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.
விஜய் நடித்த "தெறி" திரைப்படம் தான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கயாடு லோஹர் கூறியுள்ளார். "டிராகன்" படத்தின் வெற்றிக்கு பிறகு கயாடு லோஹருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தற்போது அதர்வா நடிப்பில் உருவாகி வரும் "இதயம் முரளி" திரைப்படத்திலும் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், "டிராகன்" படத்தின் வெற்றி கயாடு லோஹரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், இந்த ஆண்டின் க்ரஷ்ஷாகவும் உயர்த்தி உள்ளது. அவரது அழகையும், நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
0 கருத்துகள்