ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களை அதிர வைத்தது.
கோலிவுட் சினிமாவில் இதுவரை இல்லாத சாதனையாக, வெறும் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டீசர் புதிய வரலாறு படைத்தது.
டீசரில் அஜித் குமாரின் மிரட்டலான தோற்றம் மற்றும் வசனங்கள் ரசிகர்களை புல்லரிக்க வைத்தன. இதனால் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் தீம் மியூசிக்கை படக்குழுவினர் அதிரடியாக வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வரும் இந்த தீம் மியூசிக்கை, ரசிகர்கள் ரீபிட் மோடில் கேட்டு கொண்டாடி வருகின்றனர்.
டீசரில் இருந்த மிரட்டலான காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்த தீம் மியூசிக் அமைந்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே புதிய சாதனைகளை படைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தீம் மியூசிக் படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அஜித் ரசிகர்கள் இந்த தீம் மியூசிக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. திகில் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படம் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
.jpg)
குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. என் மார்பில் அதற்கு எதிராக.. இயக்குனர் டார்ச்சர்... போட்டு உடைத்த காஜல் அகர்வால்..!
படத்தின் டீசர் மற்றும் தீம் மியூசிக்கை தொடர்ந்து, படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
0 கருத்துகள்