தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரையுலகில் தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பேட்டியில், இரவு நேரங்களில் தூங்கும் போது உள்ளாடை அணிவதில்லை என்றும், அது தனக்கு நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாகவும் அவர் கூச்சமின்றி தெரிவித்துள்ளார்.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. “வீடாக இருந்தாலும் ஹோட்டலாக இருந்தாலும், இரவு நேரங்களில் தூங்கும்போது உள்ளாடை அணிய மாட்டேன். அதேபோல, எவ்வளவு மேக்கப் போட்டிருந்தாலும் அதை முழுமையாக கலைத்து விட்டு தான் தூங்குவேன்.
அது தான் எனக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும்,” என்று பூஜா ஹெக்டே பேட்டியில் கூறியுள்ளார். இதை வெறும் தனிப்பட்ட பழக்கமாக மட்டும் அவர் விட்டுவிடவில்லை.
“என்னை பொருத்தவரை தூங்கும் போது உள்ளாடை என்பது அவசியமே இல்லாத ஒன்று. அறிவியல் ரீதியாகவும் இதை சரி என்று கூறுகிறார்கள். அதனால் நான் இதை பின்பற்றி வருகிறேன்,” என்று அவர் மேலும் விளக்கமளித்தது, அவரது தைரியமான மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
பூஜா ஹெக்டே குறிப்பிட்டது போல, உள்ளாடை இல்லாமல் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, இரவு நேரங்களில் உடலை சுதந்திரமாக வைத்திருப்பது, சருமத்திற்கு சுவாசிக்கும் இடத்தை அளிப்பதோடு, உடல் வெப்பநிலையை சீராக்கி ஆழ்ந்த உறக்கத்தை ஊக்குவிக்கும்.
பூஜாவின் இந்த கருத்து, அவரது பழக்கத்திற்கு ஒரு அறிவியல் அடிப்படையை கொடுத்து, அதை ஒரு சாதாரண விஷயமாக மாற்ற முயல்கிறது. இது, பொதுவாக சமூகத்தில் தடை செய்யப்பட்ட அல்லது வெட்கப்பட வேண்டிய விஷயமாக பார்க்கப்படும் ஒரு பேச்சை, அவர் நம்பிக்கையோடு வெளிப்படுத்தியுள்ளதை காட்டுகிறது.
பூஜா ஹெக்டேயின் இந்த வெளிப்படையான பேச்சு, ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை பெற்றுள்ளது. ஒரு தரப்பு, “பூஜா எப்போதும் தன்னம்பிக்கையோடு தன்னை வெளிப்படுத்துபவர். இதில் தவறு எதுவுமில்லை,” என்று ஆதரவு தெரிவித்துள்ளது.
மறுபுறம், “இப்படியெல்லாம் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் என்ன?” என்று விமர்சிக்கும் குரல்களும் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில், “பூஜாவின் தைரியத்தை பாராட்ட வேண்டும்” என்று ஒரு ரசிகர் பதிவிட்டிருக்க, “இது தேவையில்லாத விளம்பர யுக்தியாக இருக்கலாம்” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், எதுவாக இருந்தாலும், பூஜா மீண்டும் ஒருமுறை தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துவிட்டார். ‘முகமூடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தெலுங்கு திரையுலகில் ‘அல வைகுந்தபுரமுலோ’, ‘மகரிஷி’ போன்ற படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இந்தியில் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ போன்ற படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர், சமீபத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார். அவரது அழகு மற்றும் நடிப்பு திறமைக்கு பெயர் பெற்றிருந்தாலும், இப்போது அவரது துணிச்சலான பேச்சு அவரை மேலும் பேசுபொருளாக்கியுள்ளது.
0 கருத்துகள்