சிரிப்பை வரவழைக்க வருகிறார் சிங்கம்புலி! ZEE5-ன் புதிய காமெடி தொடர் "செருப்புகள் ஜாக்கிரதை" - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Seruppugal Jaakiradhai Poster HD

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து தரமான மற்றும் பிரத்தியேகமான படைப்புகளை வழங்கி வருகிறது. 

Advertisement

அந்த வரிசையில், ZEE5 தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி தொடரான "செருப்புகள் ஜாக்கிரதை" ( Seruppugal Jaakiradhai ) சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டருடன் தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியையும் ZEE5 அறிவித்துள்ளது.

SS Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடி காமெடி தொடரில், நகைச்சுவை ஜாம்பவான் சிங்கம்புலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"செருப்புகள் ஜாக்கிரதை" தொடரின் கதை வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினத்தை சுற்றி நடக்கிறது. ரத்தினம் தனது விலைமதிப்பற்ற வைரத்தை ஒரு செருப்பில் மறைத்து வைக்கிறார். 

ரெய்டு அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் (சிங்கம்புலி) கொடுக்கிறார். ஆனால், தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் அந்த செருப்பை தொலைத்து விடுகிறார்கள். 

வைரம் உள்ள செருப்பை தேடி அவர்கள் மேற்கொள்ளும் கலகலப்பான பயணமே இந்த தொடரின் கதை. ஒவ்வொரு எபிசோடும் புதுப்புது காமெடியுடன், எதிர்பாராத திருப்பங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோருடன் இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சாவல் ராம், மற்றும் இயக்குனர் பிரபாகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டாளத்தில் ஒளிப்பதிவாளராக கங்காதரன், இசையமைப்பாளராக LV முத்து கணேஷ், எழுத்தாளராக எழிச்சூர் அரவிந்தன், எடிட்டராக வில்சி J சசி, ஆடியோகிராஃபியாக டோனி J, கலை இயக்குனராக S சதீஷ்குமார், சவுண்ட் டிசைனராக ஹரி ஹரன், மற்றும் உடை வடிவமைப்பாளராக M அஷோக் குமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ரசிகர்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க காத்திருக்கும் "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸ், வரும் மார்ச் 28 முதல் ZEE5 தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. 

Seruppugal Jaakiradhai Poster HD

மேலும், ZEE5 மனோரஞ்சன் விழா மூலம், மார்ச் 1 முதல் 30 வரை ZEE5, ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக பல வெற்றிப் படங்கள், பாராட்டப்பட்ட தொடர்கள், காமெடி டிராமாக்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் படங்களை இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம். இது மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பல மொழிகளில் கதைகளை வழங்கும் ஒரு தளமாகும். ZEE5, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. 

இந்த தளம் 3,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்களை 12 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, 

கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) வழங்குகிறது. இதில் சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், லைவ் டிவி மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்களும் அடங்கும்.

‘Seruppugal Jaakiradhai’ – Fascinating Cast & Crew

StarringSingam Puli, Ira Aggarwal, Vivek Raja Gopal, Manohar, Mariya Roslyn, Devika Devu, Lionel Rajkumar
DirectorRajesh Soosairaj
MusicHari
Streaming OTTZee5
Release Date28 March 2025
Language Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்