சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு ஏப்ரல் 9-ம் தேதி பாஜக மாநில தலைவர் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
கொங்கு பகுதியில் பாஜக வலுவாக இருக்கிறது. இதனால் தென் மாவட்டங்களில் தேவர், நாடார், தேவேந்திர குல வேளாளர், ஆகிய பெரும்பான்மை சமூகத்தினரிடம் இணக்கமாக இருக்கும் பாஜக பிரமுகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு நயினார் நாகேந்திரன் அவர்களை தலைவராக அறிவிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதை அறிந்த ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை அவர்கள் மத்திய அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.