இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2023 புதன்கிழமை.மனிதர்கள் எதிர்காலத்தைப் பற்றி நினைத்து குழம்பிக் கொண்டிருந்தால், அதற்கான ஒரு விடிவு காலத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய சக்தி ஜோதிடக் கலைக்கு உள்ளது. வரும் காலங்களில் என்னென்ன நடக்கும், நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை அந்தந்த கிரக நிலைகளுக்கு தக்கவாறு கணித்து கூறக்கூடிய ஜோதிடமானது மனித வாழ்க்கையில் மிக முக்கிய அங்கத்தை பிடித்துள்ளது.

எனவே நீங்கள் ஜாதகம் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படக்கூடிய அசுப பலன்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பரிகாரங்களை செய்து உங்களுக்கு ஏற்படும் அசுப பலன்களை குறைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல் அன்றாடம் நடக்கின்ற கிரக சஞ்சாரங்களை பொறுத்து ஏற்படுகின்ற பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே என்று கடினமான சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க கூடிய நாளாக உள்ளது. இன்று முழு ஆற்றலையும் நீங்கள் காட்ட வேண்டிய நாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பொழுதுபோக்குக்காக சில நேரங்களை ஒதுக்கி கொள்ளுங்கள். அமைதியாக இருந்து காரியங்களை சாதியுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை கூடுதல் பொறுப்புக்கள் அதிகரித்து காணப்படக்கூடிய நாள். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். மேலும் பணிகளை கவனமாக கையாள வேண்டிய நாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.எனவே கையில் இருக்கும் கையிருப்பு குறையும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டையில் வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து விடுங்கள். மேலும் குளிர்ந்த உணவுகளை உண்ணாமல் மிதமான சூட்டில் இருக்கும் உணவுகளை உண்ணும் போது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று சௌகரியமாக நீங்கள் இருப்பீர்கள். இனிமையான வார்த்தைகளை பேசுவதின் மூலம் பலன் கூடுதலாக கிடைக்கும். தன்னம்பிக்கையோடு இருக்கும் நீங்கள் எதையும் சாதித்து விடலாம் என்ற மன உறுதியில் இருப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை குறித்த நேரத்தில் பணிகளை முடித்து விடுவதால் உங்கள் மனநிலையும் உறுதியோடு இருப்பதால் தொழிலில் எந்த விதமான தங்கு தடையும் ஏற்படாது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படுகிறது. மேலும் நீங்கள் சொத்துக்களை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளில் பணத்தை போடுவீர்கள். பங்கு சந்தை மூலம் லாபம் பார்க்கலாம்

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தேக ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆற்றலோடு இருக்கும் நீங்கள் இன்று ஆரோக்கியத்தோடும் இருப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே என்று உங்கள் மனதில் தெளிவான நிலை இருக்கும். உங்கள் செயல்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்வீர்கள். இனிமையான வார்த்தைகளை பேசி பலரையும் கவருவீர்கள். நல்ல வாய்ப்புகள் வந்து சேரக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடங்களில் வெற்றிகரமாக பணிகளை முடிப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு உயர் பதவி உங்களைத் தேடி வரும். எனவே தொழிலில் கலை கட்டக்கூடிய நாள் என கூறலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமாக உள்ளது. லாபம் தரும் முதலீடுகள் பயனுள்ள திட்டங்களில் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். இன்றைய நாளைய திட்டத்திற்காக பணத்தை நீங்கள் பக்குவமாக கையாளுவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீங்கள் மிகவும் சிறந்த ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று பதட்டமான சூழ்நிலை உங்களிடையே இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதின் மூலம் நீங்கள் வெற்றி அடைய முடியும். அமைதியை கடைப்பிடிப்பது என்று அவசியம். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கும் மேலும் கவலையை தரும். இரவில் தூக்கமின்மை ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருந்தவரை சிறந்த பலன்களை இன்று காணுவது மிகவும் கடினமாக இருக்கும். கூடுதல் உழைப்பை நீங்கள் செலுத்த வேண்டும். உங்கள் பணியில் வெற்றி பெற சில சௌரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த அனுபவம் உங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமாக இருக்காது. பொறுப்புக்கள் அதிகரித்து தேவைகள் அதிகமாகும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாகும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கலாம். இது உங்களுக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தும் எனது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்கள் இன்று திருப்திகரமான நிலை மிகவும் அனுசரணையான போக்கும் உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். சிறந்த பலன்கள் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து இருக்கும். உங்கள் எதிர்காலத்துக்காக நீங்கள் திட்டமிடுவது மிகவும் அவசியமானது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணியில் கவனமாக இருப்பதன் மூலம் தவறுகள் நிகழாமல் தவிர்க்கலாம்.தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக பணியாற்றவும்.

 நிதி நிலையை பொறுத்தவரை பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அதை தவிர்க்க பணத்தை கவனமாக கையாளுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பற்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எனவே ஆரோக்கியத்தை அதிக அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். நீங்கள் இந்த நேரத்தில் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாள் நல்ல பலன்கள் கிடைக்க இருப்பதால் அதனை உங்களது ஆக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பொறுப்புக்கள் அதிகரித்து சிரத்தையோடு பணியாற்றக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது. உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கடினமான பணிகளை மேற்கொண்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சீராக உள்ளது. உங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வதோடு திட்டமிட்டு சேமிப்பை எப்படி உயர்த்துவது என்பதிலும் நீங்கள் ஆர்வம் செலுத்துவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறந்த ஆரோக்கியம் உங்களிடம் இன்று உள்ளது. ஆற்றல் நிறைந்து இருக்கும். நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி இன்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களுக்கு அனைத்து விதமான நிகழ்வுகளும் சாதகமாக அமையும். கடினமான பணிகளை எளிதாக முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் தீவிரமாகவும் கவனமாகவும் இருங்கள் என்று முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிட சூழல் மகிழ்ச்சிகரமாக உள்ளது. நீங்கள் சகப் பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறக்கூடிய நாள். மொத்தத்தில் இன்று உங்கள் செயல் திறனில் அதிகளவு ஆற்றல் நிறைந்திருக்கும். பணிகளை விரைவாக முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு இன்று சாதகமான நாள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போதுமான அளவு நிதி உங்களிடம் இருக்கும். சேமிப்பை உயர்த்த திட்டமிட்டு செயல்படுவீர்கள். சேமிப்பும் உயரும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை தைரியமான மனநிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று சீராக செயல்களை நீங்கள் முடிக்கலாம் என்று நினைத்தால் அது முடியாது. அதிகளவு பொறுப்புக்கள் காணப்படக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்திக் கொடுக்கும். மகிழ்ச்சியாக உங்களை வைத்துக்கொள்ள முடியாது முக்கிய முடிவுகள் எடுப்பதை என்று தவிர்த்து விடுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. கூடுதல் பணிசுமை ஏற்படும். திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும். இல்லை எனில் பணி மிகவும் கடினமாக இருக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்து காணப்படும். உங்களுக்கு கூடுதல் செலவு அதிகரிக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். இல்லை எனில் கையிருப்புகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.கை கால்களில் வலி ஏற்படும் எனவே தக்க மருத்துவரை உடனே அணுகி பார்ப்பது மிகவும் சிறப்பானது.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே என்று சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. உங்கள் சமநிலையை நீங்கள் இழந்து தவிப்பீர்கள். நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். அதன் மூலம் உங்களுக்கு சிறந்த பலன்கள் ஏற்படாது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை அதிகளவு பணிச்சுமை ஏற்படும். பணி சலிப்பூட்டுவது போல இருக்கும். சிறந்த பணி மாற்றத்தை நீங்கள் விரும்புவீர்கள். என்றாலும்

அதற்கும் சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரிக்கலாம். இது உங்களுக்கு கூடுதல் பணசுமையை ஏற்படுத்திக் கொடுக்கும். நீங்கள் உங்கள் தேவைகளை உணர்ந்து கட்டுப்பாட்டுடன் செலவுகளை செய்ய வேண்டும்.இல்லை என்றால் பண இழப்பு அதிக அளவு ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கை, கால்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள தியானம் மற்றும் யோகா கலையை செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே என்று சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எனவே உங்கள் இலக்குகளை அடைய திட்டமிட்டு பணியாற்றலாம். எதிர்பார்த்ததை விட இன்று அதிகளவு நன்மைகள் கிடைக்கக் கூடிய நாள் என்பதால் இந்த நாளை உங்களுக்கு உரிய நாளாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை வாய்ப்புகள் அதிகரித்து இருக்கும். உங்கள் பணிகளை திறமையாகவும் எளிமையாகவும் விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் உறுதியோடு இருப்பதால் தொழிற் ஸ்தானத்தில் எந்த விதமான குழப்பமும் இல்லை.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சேமிப்பு ஆற்றல் அதிகரித்து இருக்கும் லாபம் தரும். முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். எனவே பங்கு சந்தை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.பணத்தை சரியான வழியில் பயன்படுத்துவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. அசால்டாக இருக்க வேண்டாம். கவன இன்மை காரணமாக உங்கள் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படும். சில மதிப்புமிக்க வாய்ப்புகளை நீங்கள் இழக்க கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை வெற்றிகள் அதிகளவு இல்லை. இதனால் பணிகள் தேங்கிக் கிடக்கும். திட்டமிட்டு பணியாற்றினால் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக காணப்படும். வீண் செலவுகளை கட்டுப்படுத்த இயலாது. சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியம் என்பதை புரிந்து செயல்படவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியத்தை திருப்திகரமாக இல்லை. சளி சம்பந்தமான பிரச்சனைகளால் நீங்கள் பாதிப்படையலாம். எனவே உடனடியாக மருத்துவரை சந்தித்து விடுவது மிகவும் நல்லது.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று நீங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்க முடியாது. பதட்டமான சூழ்நிலை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். சில தடைகளை சந்திப்பீர்கள். உங்கள் வளர்ச்சியை அது பாதிக்கும்படி இருக்கும். எனவே வளர்ச்சி கால திட்டமிட்டு செயல்படுவது மிகவும் அவசியம்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் உங்கள் மேலதிகாரியுடன் அனுசரித்து செல்ல வேண்டும். அதிக பணிகளால் மகிழ்ச்சி குறையும். உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வது அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை நிதி கட்டுப்பாடு இருக்கும். கூடுதல் செலவுகள் செய்ய வேண்டிய நிலை இருக்கும். பொறுப்புகள் காரணமாக ஏற்படுவதால் அதிக அளவு செலவுகளும் ஏற்படலாம். எனவே சிக்கனத்தை கையாளவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டமாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தியானத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். மன உளைச்சல் காரணமாக பிரச்சனைகள் ஏற்படும். எனவே மன உளைச்சல் ஏற்படாதபடி நடந்து கொள்ளவும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …