அந்த நேரத்தில் பொண்டாட்டிக்கு புருஷன் இதை பண்ணனும்.. நிவேதா தாமஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

In a recent interview, actor Nivetha Thomas shared some refreshing thoughts on gender roles at home, urging men to step up and take part in household chores. He emphasized that sharing responsibilities isn’t just a “nice-to-have” but rather a duty that everyone should embrace.

நடிகை நிவேதா தாமஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் அம்மாக்கள் குறித்து அவருடைய வாழ்க்கை முறை குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அம்மாக்கள் குறித்தும் பொதுவான இல்லத்தரசிகள் குறித்தும் பேசுவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

அது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். உதாரணமாக நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன்.

இப்போது என்னுடைய குடும்பத்தையே எடுத்துக் கொண்டால்.. நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம்.. அப்படி சுற்றுலா செல்லும் போதெல்லாம்.. செல்ல வேண்டிய இடத்திற்கு சென்ற பிறகு அனைவரும் அங்க இருக்கக்கூடிய இடங்களை சுற்றி பார்க்க செல்வோம்.

நம்முடைய உடைமைகளை.. பெட்டி படுக்கைகளை காரில் இருந்து அறைக்கு எடுத்து செல்வோம்.. விளையாடுவோம்.. ரிலாக்ஸ் செய்வோம்.. ஆனால், இப்படி நாம் ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கும் பொழுது.. நமக்குள் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.

அதுதான் இன்று மதிய உணவு என்ன..? ரெடி ஆகிவிட்டதா.. இல்லையா..? என்ற கேள்வி. நாம் ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கும் பொழுது நம் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் சமையலறைக்கு சென்று முழுவதும் சமைத்து முடித்தால் தான் அங்கு விடுமுறைக்காக கொண்டாட சென்ற அனைவருக்கும் சாப்பாடு கிடைக்கும்.

அப்படி என்றால் இந்த சாப்பாட்டை சமைக்க கூடிய என்னுடைய அம்மா அந்த கொண்டாட்டத்தில் பங்கு எடுத்துக் கொள்ளக் கூடாதா..? அவர் ரிலாக்ஸ் பண்ண கூடாதா…? அவர் விளையாடக்கூடாதா..? என்ற கேள்வி எனக்குள் உரைத்தது.

எல்லோருமே சுற்றுலா சென்று இருக்கிறோம். ஆனால், அங்கும் கூட தொடர்ந்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாரே என் அம்மா.. என்று கேள்வி என்னை உறுத்தியது.

அதன் பிறகு நான் என்னுடைய தம்பி, என்னுடைய அப்பா எல்லாருமே சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். சமையலறையில் நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களை நாங்களே கழுவி வைப்பது என்ற முடிவு அது.

தற்போது வரை அதை நாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அது எங்கள் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது வெளியே எங்கேயும் சுற்றுலா செல்வதாக இருந்தாலும் சரி எல்லா இடத்திலும் நாங்கள் பயன்படுத்திய பாத்திரத்தை நாங்களே கழுவி வைப்போம்.

ஒருவர் வேலையை செய்வதற்கு அவரை பாராட்ட வேண்டும் என்ற தேவை இல்லை. அதனை அவர் எதிர்பார்க்கவும் மாட்டார். அவருடைய வேலையில் நாம் பங்கெடுத்துக் கொள்வது தான் அவருக்கு மிகப்பெரிய பாராட்டு என பேசியிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ்.

தொடர்ந்து பேசிய அவர் ஒரு கணவர் சமையல் அறையில் மனைவிக்கு ஏதேனும் வேலை செய்து கொடுத்தால் அதற்கு பெயர் உதவி கிடையாது. ஒரு கணவர் சமையலறையில் தன்னுடைய மனைவியை பாத்திரம் கழுவும் நேரத்திலோ சமைக்கும் நேரத்திலோ அவர்களின் இருந்து இவரும் வேலையை செய்ய வேண்டும் அது அவருடைய கடமை என பேசி இருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ்.

இவருடைய இந்த பேச்சுக்கு ஆதரவான கருத்துக்களும் அதே சமயம் எதிரான கருத்துகளும் வந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி உங்களுடைய தனிப்பட்ட கருத்தை கமெண்ட் செக்சனில் பதிவு செய்யலாம்.

Summary in English : In a recent interview, actor Nivetha Thomas shared some refreshing thoughts on household responsibilities that are sure to resonate with many. She boldly stated that men should step up and take part in their wives’ household chores because, let’s be honest, it’s a shared duty! Nivetha emphasized that teamwork is essential in any relationship, and splitting the responsibilities can lead to a happier home.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version