பள்ளியில் படிக்கும் போதே.. அதை பண்ணியிருக்கேன்.. வாயை விட்டு வம்பில் சிக்கிய பிரியங்கா மோகன்..!

நடிகை பிரியங்கா மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் க்ரஷ் யார் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்து வம்பில் சிக்கி இருக்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் தன்னுடைய படங்களை வெளியாகும் போது ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன் இடம் உங்களுடைய முதல் க்ரஷ் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.. அல்லது எதிரே வைக்கப்பட்டிருக்கும் கசப்பான பழச்சாற்றை குடிக்க வேண்டும்.

இந்த கேள்வி எழுப்பியதும் பதில் அளிக்கிறேன் என்று ஆரம்பித்த நடிகை பிரியங்கா மோகன். என்னுடைய க்ரஷ் பெயரை நான் சொல்ல மாட்டேன்.

ஆனால், க்ரஷ் இருந்ததா என்று கேட்டால் இருந்தது. பள்ளியில் படிக்கும் போது எனக்கு ஒருவர் மீது க்ரஷ் இருந்தது எனக்கு கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளர் இல்லை நீங்கள் க்ரஷ் யார் என்று சொல்கிறேன் என்றுதான் ஆரம்பித்தார்கள். அதனால் நீங்கள் அவருடைய பெயரை கண்டிப்பாக சொல்லவேண்டும் என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு என்ற நடிகை பிரியங்கா மோகன் கண்டிப்பாக நான் அவருடைய பெயரை சொல்ல மாட்டேன் ஆனால் பள்ளியில் படிக்கும்போது எனக்கு ஒருவர் மீது க்ரஷ் இருந்தது என மீண்டும் மீண்டும் அதே சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ… என்ன செய்கிறாரோ.. இப்போது அவர் பெயரை ஏன் சொல்ல வேண்டும். எதுக்கு வம்பு..? அவருடைய பெயரை சொல்ல வேண்டும் என்றால் நான் கண்டிப்பாக சொல்ல மாட்டேன். அதற்கு பதிலாக இந்த கசப்பானபழச்சாற்றை குடித்து விடுகிறேன் என கூறினார்.

இப்படி முதலிலேயே குடித்திருந்தால் பிரியங்கா மோகன் இப்படி வம்பில் சிக்காமல் போயிருப்பார். ஆனால், சொல்கிறேன் என வாயை விட்டு வம்பில் சிக்கிய பிரியங்கா மோகனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version