இதை கூட உடலுறவா பாக்க முடியுமா..? நான் என்ன சதை பிண்டமா..? சாய் பல்லவி நெத்தியடி..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அமரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இதனை தொடர்ந்து பல்வேறு தனியார் youtube சேனல்களில் படத்தின் பிரமோஷனுகாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தீபாவளிக்கு வெளியாக கூடிய இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது. ஏனென்றால், உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம் என்பதால் தான்.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி சினிமாவில் அறிமுகமான பகுதியில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, பிரேமம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி இருக்கிறேன்.

அந்த வகையில் வெளிநாட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நடனத்திற்கு ஏற்ப உடை அணிந்திருந்தேன். நான் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை அப்போது குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டுதான் ஆடுவேன். அப்படித்தான் ஆட வேண்டும். அதுபோல, அந்த நடனத்திற்கு ஏற்றார் போல உடை அணிந்திருந்தேன். அதுதான் சரியாக இருக்கும்.

ஆனால், பிரேமம் படம் வெளியான பிறகு யார் இந்த பொண்ணு என தேடுதலில் என்னுடைய அந்த பழைய வீடியோவை கண்டறிந்து இணையத்தில் வைரல் ஆக்கினார்கள். அந்த வீடியோ வேறுவிதமான கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் இதைக்கூட ஒரு உடலுறவு ரீதியாக பார்க்க முடியுமா..? என்றெல்லாம் நான் நொந்து போனேன். ஐ அம் நாட்ட பீஸ் ஆஃப் மீட்.. நான் ஒரு சதை பிண்டம் கிடையாது.

உடம்பை காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. மலர் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் என்னை கொண்டாடினார்கள். ஆனால், இந்த வீடியோ காட்சிகள் வெளியான பிறகு பிரேமம் படத்தில் நல்ல பெண்ணாக நடிச்சிருக்கு.. இந்த பொண்ணா இப்படி டான்ஸ் ஆட இருக்கிறது என்று ஷாக் ஆன ரசிகர்கள் தான் அதிகமாக இருந்தார்கள்.

அப்போதுதான் எனக்குள் ஒரு முடிவை நான் எடுத்தேன். கிளாமரான கதாபாத்திரங்களை நடிக்க கூடாது. நான் இப்படி இருந்தாலே நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் நம்மை கொண்டாடுவார்கள்.

அதை விட்டுவிட்டு கிளாமரான கதாபாத்திரங்களில் நடிப்பது தேவையற்றது. தேவையில்லாத என நான் உணர்ந்தேன். இதனால் பல பட வாய்ப்புகளை நான் எழுந்த இழந்திருக்கிறேன்.

அதனால் எனக்கு ஒரு கவலையும் கிடையாது. ஏனென்றால், எனக்கு கிடைக்க கூடிய கதாபாத்திரங்கள் எனக்கு கிடைக்கக்கூடிய தோற்றங்கள் எல்லாம் ரசிகர்கள் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.

அப்படி இருக்கும் பொழுது கவர்ச்சி காட்டாததால் இப்படியான பட வாய்ப்புகள் போய்விட்டதே என்று நான் எப்போதும் வருத்தப்படுவது கிடையாது. என்னுடைய திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் என்னுடைய திறமையை மட்டுமே பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். என நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version