தமிழ் சினிமா குறித்து சங்கீதா திமிர் பேச்சு..! இதை பத்தி கவலை இல்ல.. இது தான் என்னுடைய பதில்..!

சென்னையில் பிறந்து வளர்ந்த சங்கீதா 1978 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாகவும் வடிவழகியாகவும் திகழ்ந்த இவர் தமிழில் 90-களில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆன நடிகைகளின் ஒருவராக மாறிய இவர் பிதாமகன் திரைப்படத்தில் தேசிய விருது பெற்றிருக்கிறார்.

திமிர் பேச்சு..! இதை பத்தி கவலை இல்ல..

மேலும் நடிகை சங்கீதா, விக்ரம், சூர்யா உடன் இணைந்து நடித்த பிறகு மாதவனோடு இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக செயல்பட்டு வரும் இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக திகழ்ந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடன திறமை பன்மடங்கு பெரிதாக முக்கிய காரணமாக இருந்த நபர்களில் சங்கீதாவும் ஒருவர் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் பிஸியாக நடிக்கும் போதே அதிகளவு தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி திருவண்ணாமலையில் தமிழில் பின்னணி பாடகராக இருக்கும் கிரிஷ்சை திருமணம் செய்து கொண்டார். திரைத்துறை மொத்தமே இவரது திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறிய நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை சங்கீதா பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தான் என்னுடைய பதில்..

இதற்கு காரணம் இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதை விட தெலுங்கில் சினிமாவில் நடிப்பது தான் மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ் படங்களில் இவராக நடிக்க யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. அவர்களாக கூப்பிடுகிறார்கள் நான் நடிக்கிறேன் என்று திமிராக பேசியிருக்கிறார்.

இதில் நான் என்னமோ வாழ்க்கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் மின்சார கட்டணம் கூட கட்ட முடியாமல் தடுமாறுவதாகவும் நினைக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. தெலுங்கு சினிமாவில் எனக்கு அதிக அளவு பணமும் வாய்ப்பு கிடைக்கிறது‌.

எனவே எனக்கான மரியாதையை யாரும் கொடுக்கவில்லை என்றால் அது எந்த மொழியாக இருந்தால் என்ன அந்த மொழியையும் அந்த சினிமாவையும் நான் முற்றிலும் வெறுக்கிறேன் என்று தெனாவட்டாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இதை அடுத்து எந்த மொழியாக இருந்தால் என்ன எனக்கு அவமரியாதை பண்ணக்கூடிய மொழியும் சினிமாவும் எனக்கு தேவையில்லை என முகம் சுளிக்கும்படி பேசி இருக்கிறார். தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version