“சௌந்தர்யா குறித்து படுமோசமாக பேசிய சுனிதா..” கேவலம்.. விஜய் சேதுபதி என்ன செய்ய போறாரு..!

பிக்பாஸ் எட்டாவது சீசன் மூன்றாவது வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் விளையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வெவ்வேறு அணிகளாக பிரிந்து ஒருவர் ஹோட்டலின் நிர்வாகம் செய்யக்கூடிய குழுவாகவும்.. மற்றொருவர் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர் போலவும்.. செயல்பட வேண்டும்.

இதனிடையே பல்வேறு டாஸ்க்குகள் இருக்கின்றன. மிகவும் சுவாரசியமாக இந்த டாஸ்க்குகள் இடம் பெற்றிருந்தன. இந்த டாஸ்கின் முடிவில் வாடிக்கையாளராக வந்த குழுவினர் ஹோட்டல் ஊழியராக செயல்பட்ட குழுவினர் குறித்து தங்களுடைய புகார்கள் மற்றும் நிறைகளை கூறலாம்.

இந்நிலையில், ஹோட்டல் நிர்வாகம் குறித்து போட்டியாளர் சுனிதா மற்றும் சௌந்தர்யா இடையே விவாதம் ஆரம்பித்து அது வாக்குவாதமாக முடிந்தது.

இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்..? சௌந்தர்யா பேசியது அனைத்துமே அந்த போட்டியில் நடந்த விஷயங்களை மட்டும் தான்.

ஆனால் சுனிதா சௌந்தர்யாவின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து மோசமாக பேசியிருக்கிறார். இதனை அருகில் இருப்பவர்களுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாக பேசினார். ஒரு வேலை சௌந்தர்யாவுக்கு கேட்கும் படி சத்தமாக பேசி இருந்தால் பிக் பாஸ் வீட்டில் பெரிய கலவரமே வெடித்திருக்கும்.

அந்த அளவுக்கு மோசமான பேச்சை பேசியிருக்கிறார் சுனிதா. இவருடைய அந்த பேச்சைக் கேட்டு ரசிகர்கள் சவுந்தர்யா முழுக்க முழுக்க அந்த போட்டி குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் சௌந்தர்யாவை தனிப்பட்ட முறையில் அவர்களுடைய குடும்பத்தை தாக்கும் வகையில் பேசி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது குறித்து விஜய் சேதுபதி நிச்சயம் சுனிதாவிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version