“அப்போ.. உங்க அம்மாவுக்கும் இது பொருந்தும் தானே..” சூரியாவை வண்டை வண்டையாக கேட்கும் நெட்டிசன்கள்..!

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சர்ச்சைக்குரிய ஒரு தம்பதியினராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் சூரியா ஜோதிகா.

ஊரு கண்ணு பட்டதோ..? யாரு கண்ணு பட்டதோ..? தெரியவில்லை. சூரியா ஜோதிகா என்றால் அவ்வளவு நல்ல பெயராக இருந்தது. ஆனால், இருவரும் தங்களுடைய வாயாலயே அதனை கெடுத்துக் கொண்டார்கள் என்பது தான் விமர்சனம்.

நடிகை ஜோதிகா மத விஷயங்கள் குறித்து மூக்கை நுழைப்பது.. நடிகர் சூர்யா அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற விஷயங்களை வெளிப்படையாகவே செய்வது.. பெரும்பாலானோர் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டனர்.

இவர்களுடைய திருமண உறவே கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சர்ச்சையான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிகமான செயற்கைத்தனம் இவர்களுடைய பதிலில் தெரிகிறது என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

என்ன விஷயம்..? இப்போது எதற்கு நடிகர் சூர்யாவை போட்டு பொளந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள் என்று விவரம் தேடி பார்த்த போது தன்னுடைய மனைவி ஜோதியாக குறித்து நடிகர் சூர்யா பொன்னான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

அதாவது 18 ஆண்டுகளாக பிறந்து வளர்ந்த மும்பையை விட்டுவிட்டு தன்னுடைய பெற்றோர்களை நண்பர்களை விட்டுவிட்டு ஜோதிகா சென்னைக்கு வந்தார். அதன் பிறகு 27 வருடமாக சென்னையில் தான் அவர் வாழ்ந்து வருகிறார். அவர் தற்போது தன்னுடைய பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என தன்னுடைய மனைவி குறித்து சூர்யா பேசியிருக்கிறார்.

ப்பா.. என்ன மனுஷன்யா..? நல்ல மனுஷனா இருக்காரே.. என்று அந்த விஷயத்தை அணுகும் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மனைவி மாறும் அவங்கவங்க பெற்றோர் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று நினைத்தால் நிலைமை என்ன ஆவது..? என்று கேள்வி எழுப்பும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இது குறித்து ரசிகர்கள் தங்களுடைய கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த தம்பதியினர் மிகுந்த செயற்கைத்தனமாக இருக்கிறார்கள். எப்போதுமே இவர்களுடைய உறவில் ஏதோ ஒரு வில்லங்கம் இருப்பது போலவே தோன்றுகிறது என கருத்து தெரிவித்திருக்கிறார் ஒரு ரசிகர்.

27 வருஷமா என்ன பண்ணிட்டு இருந்த இப்போது தான் உனக்கு ஞாபகம் பிறந்திருக்கா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இன்னொரு ரசிகர்.

ஓவர் ஆக்டிங் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஒரு ஆசாமி. நீங்கள் சொல்வது சரி என்றால் உங்கள் அம்மாவுக்கும் இந்த நியாயம் பொருந்தும் தானே..? அப்படி என்றால் உங்களுடைய உங்க அம்மாவை எப்போது உங்க பாட்டி வீட்டுக்கு அனுப்ப போறீங்க..? உன் கருத்தை தூக்கி குப்பையில் போடு மேன் என்று சற்று கோபத்துடனே இந்த கருத்தை எழுதி இருக்கிறார்.

நட்சத்திர தம்பதியினராக இருக்கும் சூர்யா ஜோதிகா பொதுவெளியில் பேசும்போது ஏனோதானோ எனவும் எடக்குமடக்கமும் பேசி இப்படி வம்பை வாயாலேயே வாங்கி கட்டி கொள்கிறார்களோ..? என்ற தோன்றுகிறது.

இது குறித்து உங்களுடைய பார்வை என்ன..? என்பதை கமெண்ட் செக்ஷன்ல பதிவு செய்யுங்கள். 

Summary in English : Actor Suriya’s statement about his wife Jyothika stirred up quite a buzz on the internet!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version