மூத்த நடிகை வடிவுக்கரசியின் மகளா இது..? இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

80களில் மட்டுமில்லாமல் 90 களிலும் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் நடிகை வடிவுக்கரசி.

பல்வேறு திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் நடித்து பெருவாரியான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு நடிகை வடிவுக்கரசி கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் சின்னத்திரையிலும் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு போட்டியில் நான் 1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான சிவப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன்.

இந்த திரைப்படம் எனக்கு நல்ல வரவேற்பு பெற்றுக் கொடுத்த படம் ஆகும் என கூறியிருந்தார். தற்போது வயதான காரணத்தினால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைப்பது அரிதாக இருக்கிறது.

ஆனால் தொலைக்காட்சி சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருடைய மகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியை ஆக பணியாற்றிக் கொண்டிருந்த நடிகை வடிவுக்கரசி தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

இவருடைய உறவினர் ஏ.பி.நாகராஜன் பிரபல இயக்குனர் ஆவார். இவர் இயக்கத்தில் வெளியான “வடிவுக்கு வளைகாப்பு: என்ற திரைப்படத்தின் வெற்றி பெற்றது.

இதன் நினைவாக இவருக்கு வடிவுக்கஅரசி என்று பெயரிட்டு இருக்கிறார் என்பது பலரும் அறியாத சுவாரசியமான தகவல். இந்நிலையில் வடிவுக்கரசியின் மகளும் நடிகையுமான சண்முகப்பிரியாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version