இஸ்லாமியருடன் திருமணம்.. மாமியார் இதை செய்ய சொன்னார்.. அதிர்ச்சி ஆனேன்.. விசித்ரா ஓப்பன் டாக்..!

பிரபல நடிகை விசித்ரா இஸ்லாமியரான என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரை திருமணம் செய்து பிறகு தன்னுடைய மாமியார் வீட்டில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவங்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது, நான் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டேன். அவருடைய அம்மா என்னை நமாஸ் செய்ய வேண்டும் என கூறுவார். நானும் செய்வேன்.

ஏனென்றால், அவர்கள் வீட்டில் ஒரு பழக்கம் இருக்கும்.. சில விஷயங்களை தவறாமல் கடைப்பிடிப்பார்கள்… அது நம்மால் கெட்டுப்போக கூடாது.

நான் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். அங்கே சென்று நான் இந்து.. எங்க அப்பா இந்து.. எங்க அம்மா கிருஸ்துவர் என பேசிக்கொண்டிருந்தால் அது சரியாகாது. மேலும், என்னுடைய மாமியாரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் விருப்பப்பட்டு தான் நான் நமாஸ் செய்தேன்.

ஒருவேளை என்னை கட்டாயப்படுத்தி அதனை செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால் கண்டிப்பாக செய்திருக்க மாட்டேன். கட்டாயப்படுத்தினால் எந்த வேலையும் என்னிடம் நடக்காது.

அதன் பிறகு இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால்.. நாம் காலையில் எப்போதுமே சைவம் தான் சாப்பிடுவோம்.. இட்லி.. தோசை.. சாம்பார் இது போலத்தான் சாப்பிடுவோம்.

ஆனால் கேரளாவில் என்னுடைய மாமியார் வீட்டில் காலையிலேயே அசைவ உணவு சமைப்பார்கள். ஆரம்பத்தில் எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அதன் பிறகு நான் பழகிக் கொண்டேன். அடிக்கடி குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் சந்தித்து கெட் டு கெதர் பார்ட்டி ஆகியவற்றை செய்வார்கள். அடிக்கடி இது நடக்கும் என பதிவு செய்திருக்கிறார் நடிகை விசித்ரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version