இதுல என்னடா தப்பு இருக்கு.. பிக்பாஸ் வீட்டில் சௌந்தர்யா அட்ராசிட்டி.. தெரிஞ்சுதான் பண்றாங்களான்னு தெரியலையே.!

பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவராக நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் இருந்து வந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த சௌந்தர்யா தொடர்ந்து சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு இருந்து வந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலமாக சௌந்தர்யாவிற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஆஹா ஓடிடியில் வெளியான வேற மாறி ஆபீஸ் சீரிஸில் நடித்ததன் மூலமாக அவருக்கு வரவேற்பு அதிகரித்தது.

அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை இவர் பெற்றார். தற்சமயம் சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு என தனிப்பட்ட ரசிகர் வட்டாரம் ஒன்று இருந்து வருகிறது.

இதுல என்னடா தப்பு இருக்கு

இதனை தொடர்ந்துதான் இவருக்கு பிக் பாஸில் வாய்ப்புகளும் கிடைத்தது. பிக் பாஸிற்கு வந்த பிறகு இவருக்கான ரசிகர்கள் இண்ணமுமே அதிகரித்திருக்கின்றனர் என்று கூறலாம். எப்படியும் பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

காதல் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான அனைத்து அம்சங்களும் சௌந்தர்யாவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் சௌந்தர்யாவிற்கு எதிரான பிக்பாஸ் ரசிகர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

சௌந்தர்யா அட்ராசிட்டி

சௌந்தர்யா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக விளையாடுவதே கிடையாது. எப்போதும் அமைதியாகவே அமர்ந்து இருக்கிறார் என்று அவரை குறித்து குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சௌந்தர்யாவிற்கு அந்த வீட்டுக்கு சென்றது முதலே ஒரு பழக்கம் இருந்து வருகிறது.

எப்போது பசிக்கிறதோ அப்பொழுது இருக்கும் உணவை எடுத்து சாப்பிடுவது அவரது பழக்கமாக இருக்கிறது. இதனை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சௌந்தர்யாவிடம் கேட்கும் பொழுது பசிக்கும்பொழுது சாப்பிடுவதில் என்ன தப்பு என்று கேட்டு இருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் பேசும்பொழுது இதை தெரிந்துதான் செய்கிறாரா சௌந்தர்யா? என்று இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version