விஜய் சேதுபதி சொன்ன அந்த வார்த்தை.. இப்போ ஆட்டக்களமே மாறிடுச்சி.. நெருப்பாய் இறங்கிய சௌந்தர்யா.!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அது அதிக வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாக தமிழில் இருந்து வருகிறது. ஏற்கனவே ஏழு வருடங்கள் நல்லபடியான வெற்றியை கொடுத்த நிலையில் பிக் பாஸ் தற்சமயம் எட்டாவது சீசனை துவங்கி சென்று கொண்ட்ள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதி பேசும் விஷயங்கள் பிக் வாஸ் நிகழ்ச்சியை மாற்றி அமைத்து வருகிறது. ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பொழுது அதில் இருந்த போட்டியாளர்கள் யாருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விளையாடிய மாதிரி விளையாடவில்லை.

விஜய் சேதுபதி சொன்ன அந்த வார்த்தை

பெரும்பாலும் மக்களுக்கு அயற்சியை கொடுக்கும் வகையில்தான் அவர்களது விளையாட்டு இருந்தது. இதனால் அவர்களுக்கு விஜய் சேதுபதி தொடர்ந்து அட்வைஸ் வழங்கி வந்தார். முக்கியமாக சௌந்தர்யா தொடர்ந்து பெரிதாக விளையாடாமல் இருந்து வந்தார்.

இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது அதனால் தான் இரண்டு வாரம் நாமினேஷனில் இருந்த போதும் கூட தொடர்ந்து அதிக ஓட்டுகளை வாங்கி சௌந்தர்யா தப்பித்து வந்தார். இந்த நிலையில் இது பற்றி போனவாரம் விஜய் சேதுபதி சௌந்தர்யாவிடம் பேசும்பொழுது நீங்கள் செய்யும் சில விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைகின்றன

ஆட்டக்களமே மாறிடுச்சி

ஆனால் அது மாதிரி நிறைய நீங்கள் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் .நீங்கள் ஜெஃப்ரியுடன் டான்ஸ் ஆடியது நல்ல அழகாக இருந்தது. ஆனால் நீங்கள் அது மாதிரி நிறைய செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து இந்த வாரம் சௌந்தர்யா நன்றாக விளையாட துவங்கியிருக்கிறார் சௌந்தர்யா. பிக்பாஸில் இருக்கும் ஒவ்வொருவரும் அங்கு இருக்கும் வேறு ஒரு நபர் போல மாறி நடிக்க வேண்டும் என்று இந்த வாரம் டாஸ்க் வைக்கப்பட்டது. அதை மிக சிறப்பாக செய்து வருகிறார் சௌந்தர்யா இதனை தொடர்ந்து சௌந்தர்யாவிற்கு இப்பொழுது வரவேற்பு இன்னுமுமே அதிகரித்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version