TVK மாநாடு..! இதனால் தான் பிரபாபரன் கட்-அவுட்டை விஜய் வைக்கல.. சீமான் சொன்ன காரணத்தை பாருங்க..!

TVK மாநாடு : நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் முதல் மாநாடு நடக்க இருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் அரசியல் களமும் மாறக்கூடிய நாளாக இந்த நாள் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த கட்டவுட்டுகள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறின.

சங்க கால தமிழ் அரசர்கள் மற்றும் வீரமங்கைகளான வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் மாநாட்டு திடலில் 70 அடி கட்அவுட்டுகளாக வைக்கப்பட்டிருந்தன.

முற்றிலும் ஒரு புதிய அரசியல் யுத்தியாக இது பார்க்கப்பட்டது. ராஜராஜ சோழனுக்கு கல்லறை கூட கட்டாமல் சமீபத்தில் முதலமைச்சராக இருந்து மறைந்த தலைர்களுக்கு கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து கல்லறை எழுப்பி அதனை ஒரு சுற்றுலா தளம் ரேஞ்சுக்கு செலவு செய்கிறார்கள் இப்போது இருக்கும் அரசியல்வாதிகள்.

ஆனால், நடிகர் விஜய் தன்னுடைய மாநாட்டின் நுழைவாயிலில் ராஜராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்களின் புகைப்படங்களை இடம் பெற செய்து புது புரட்சியை உண்டாக்கி இருக்கிறார்.

இதன் மூலம் தமிழகம் ஒரு புதிய அரசியலை நோக்கி நகர இருக்கிறது என்பதை உணர முடிகிறது. நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் எப்படி வரவேற்கிறது போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில், நடிகரும், பிரபல அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள் சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்டுகள்.. வெறும் கட்-அவுட்டுகள் அல்ல.. ஒவ்வொரு கட்-அவுட்டின் பின்பும் மிகப் பெரிய அரசியல் இருக்கிறது. இதனை நான் வரவேற்கிறேன்.

பிரபாகரன் கட்அவுட் வைத்திருக்க வேண்டும். தம்பி விஜய் பிரபாகரன் கட்அவுட் வைக்காததற்கு காரணம் அதனை நான் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்துகிறேன் என்பதால் அதனை அவர் தவிர்த்திருக்கலாம். இதுதான் பிரபாகரன் கட்டவுட்டை விஜய் மாநாட்டில் வைக்காததற்கான காரணம் என பதிவு செய்திருக்கிறார் சீமான்.

இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version