இது தான் கஷ்டமா இருக்கு..! தமிழக வெற்றிக்கழக மாநாட்டு திடலில் பள்ளி மாணவி பரபரப்பு பேட்டி..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நாளை ( அக்டோபர் 27 ) நடைபெற இருக்கிறது.

இதனை தொடர்ந்து இன்று முதல் விக்கிரவாண்டி சாலையில் திருவிழா கோலம் போட்டு இருக்கிறது. விஜயின் கட்சியின் தொண்டர்கள் ரசிகர்கள் பலரும் தற்போதையிலிருந்து மாநாடு நடக்கும் இடத்தில் குவிய தொடங்கி இருக்கிறார்கள்.

அங்க இருக்கும் காட்சிகளை பார்க்கும் பொழுது மாநாடு இன்றா..? அல்லது நாளையா..? என்ற சந்தேகம் எழும் வகையில் இருக்கிறது.

அந்த அளவுக்கு மக்கள் கூட்டத்தால் திணறி கொண்டிருக்கிறது வி.சாலை. நடிகர் விஜயின் அரசியல் வருகையை எந்த அளவுக்கு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக பார்க்க முடிகிறது.

மேலும் நாளை இந்த மாநாடு எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பான முறையில் நடந்து முடிய வேண்டும் என்பது நடிகர் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று மாநாடு திடலுக்கு வந்திருந்த ஒரு பள்ளி மாணவியிடம் பிரபல ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது

அதில் பேசிய அவர் நாளை பள்ளி குழந்தைகள் பள்ளி மாணவிகள் இங்கு வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் இன்று வந்து எப்படி இந்த மாநாடு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து சொல்லலாம் என வந்திருக்கிறேன்.

நடிகர் விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சமீப காலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அவர் விருதுகளை கொடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

அதனால் எனக்கு நடிகர் விஜயின் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நடிப்பை நிறுத்திவிட்டார் என்பது கவலையாக இருந்தாலும் இனிமேல் நடிகர் விஜயின் பேச்சை தொடர்ந்து கேட்கலாம் அவரை தொடர்ந்து பார்க்கலாம் என்ற மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது.

அவரை இனிமேல் பொதுத்தளத்தில் அதிக நேரம் பார்க்க முடியும். ஆனால் அவர் படங்களை நடிப்பதை நிறுத்திவிட்டார். திரையரங்குகளில் இனிமேல் அவருடைய படங்களை பார்க்க முடியாது என்பது தான் கஷ்டமாக இருக்கிறது.

இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிய வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை பதிவு செய்திருக்கிறார் அந்த மாணவி. இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version