“பாசிசம்.. பாயாசம்.. திராவிடம் பெயரில் ஏமாத்துறீங்க..” விஜய் பேச்சுக்கு துணை முதல்வர் கொடுத்த பதில்..!

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

மதவாதத்தால் மக்களை பிரித்து ஆட்சி செய்பவர்களுக்கு சற்றும் சலைத்தவர்கள் அல்ல நீங்கள்.. அவர்களை காட்டி பயமுறுத்தி இங்கே சிறுபான்மை பெரும்பான்மை என இரு வேறு சமூகங்களாக பிரித்து அவர்களுக்குள் ஒரு பதற்றத்தை உருவாக்கி திராவிடம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அவர்கள் பாசிசம் என்றால்..? நீங்கள் என்ன பாயாசமா..? நீங்களும் எனக்கு எதிரி தான் என்று நடிகர் விஜய் கோபம் கொப்பளிக்க பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த பேச்சு குறித்து தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்… நான் இன்னும் அவர் பேசியதை பார்க்கவே இல்லை.. நான் பார்க்காததை பற்றி பதில் கொடுப்பது சரியாக இருக்காது.

நீங்கள் சொல்வதை கேட்டுவிட்டு நான் பதில் கொடுத்தால் அது சரிவராது. அதனால் நான் பார்த்துவிட்டு என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன் என கூறி சட்டென காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றார்.

-நன்றி தந்தி டிவி

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version