“எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது..” வெடித்த சர்ச்சை.. விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

நடிகர் விஜய் நேற்று தன்னுடைய தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.

இந்த மாநாட்டிற்கு வரும் வழியில் பல்வேறு காரணங்களால் 6 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர்.

மாநாடு தொடங்கும் முன்பே இந்த மரணம் சம்பவங்கள் அரங்கேறின. ஆனால், நடிகர் விஜய் மேடையில் இது குறித்து தன்னுடைய வருத்தத்தை எதையும் பதிவு செய்யாமல் அரசியல் மட்டும் பேசிவிட்டு சென்று விட்டார்.

மேடையிலேயே அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது..? என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இன்னும் சில விஜய் ரசிகர்கள் கூட தங்களுடைய வேதனைகளை பதிவு செய்து வந்தனர்.

இன்று மதியம் முதலே இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்க தொடங்கியது. நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்த பிறகு அவருக்கு எதிராக கிடைக்கக்கூடிய விஷயங்களை எல்லாம் ஊதி பெரிதாக்குவார்கள் என்பது தெரிந்த விஷயம் தான் என்று இந்த விஷயத்தை கடந்து சென்று கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,

வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்

திரு. JK.விஜய்கலை,
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்

திரு. வசந்தகுமார்,
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை

திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.

திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி

மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த

திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை

ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த அறிக்கை மூலம் வெட்டித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் விஜய்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version