பிரபல நடிகை பாத்ரூம் போனதை மறைந்திருந்து பார்த்த முன்னணி நடிகர்..! இப்படியெல்லாம் நடக்குது ஷூட்டிங் ஸ்பாட்ல..!

தற்போது பெண்களுக்கு சினிமாவில் பாதுகாப்பு அற்ற நிலைமை தான் நிலவுகிறது என்று கூறினால் உங்களுக்கு அது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதனை தடுக்க பல்வேறு சட்டங்கள் வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தாலும் அதற்கு உரிய நிலை ஏற்படவில்லை.

மேலும் எவ்வளவு தான் சட்ட திட்டங்கள் வந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பெண்களை மதிக்கின்ற ஆண்கள் உருவாகும் போது தான் என்ற நிலை மாற்றம் அடையும் என்று கூறலாம்.

இதனை அடுத்து தற்போது வெளி வந்திருக்கும் செய்தியானது ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது நடிகை ஒருவர் பாத்ரூம் போனதை பார்க்க முயன்ற நடிகர் குறித்து பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு கூறிய விஷயம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அன்று முதல் இன்று வரை சினிமா ஆண் ஆதிக்கத்தின் கீழ் இருப்பது பேசும் பொருளாக மாறிவிட்ட நிலையில் அவர்களுக்கு ஏற்றபடி உரிய படங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் நடிக்கும் நடிகைகளின் நிலைமையும் அந்தந்த நடிகர்களின் மனோபாவத்திற்கு தக்கபடி உள்ளது.

இதனை அடுத்து திரை உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் தற்போது ஹீரோயினிகளுக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய கதைகள் வெளி வந்து, அதில் இளம் நடிகைகள் முதல் நடித்து வருவது வரவேற்க தக்க விஷயம் தான்.

இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் பெண்களுக்கு என்று போதிய அளவு பாதுகாப்பு இன்மை என்பது தொடர் கதையாக தான் உள்ளது. சினிமாவில் நடிக்க புதிதாக வரும் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் சினிமா குடும்பத்தில் இருந்து வந்த வரலட்சுமிக்கு இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்துள்ளது.

சரத்குமாரின் மகளுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களைப் பற்றி கேட்கவா? வேண்டும். இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விவகாரம் எப்படி இவ்வளவு துணிச்சலாக நடக்கிறது என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்.

ஆரம்ப நாட்களில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேச தயங்கிய நடிகைகள் தற்போது ஓப்பனாக பேசி வருவது ஆரோக்கியமான விஷயம்.

எனினும் இந்தப் பிரச்சனை போலவே சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சில அசௌரியமான சூழ்நிலைகளும் பெண்களுக்கு உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஷூட்டிங் வெளியே நடக்கும் போது நடிகைகளுக்கு சங்கடம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று அம்மு அபிராமி அண்மை பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது சினிமாவில் கேரவன் கலாச்சாரம் பெருகி உள்ளது. உச்ச நட்சத்திரங்கள் நடிகைகள் அந்த கேரவனில் வசதி செய்து தரப்படுகிறது. ஆனால் கேரவன் இல்லாதபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நிகழ்ந்த கொடுமையை பற்றி தான் தற்போது செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

இது நிமித்தமாக தனியார் Youtube பேட்டி ஒன்றில் பேசிய அவர் இன்று 7 ஸ்டார் கேரவன் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்து விட்டது. மேலும் கமலஹாசன் போன்ற நடிகர்கள் சொந்தமாக கேரவனை வாங்கி விட்டார்கள். இந்த கேரவன் நடிகைகளுக்கு வரப் பிரசாதமாகவே உள்ளது என கூறலாம்.

ஆனால் 90களில் நடித்து வந்த பிரபல நடிகை அவர் பெயரை குறிப்பிட்டு சொல்ல விரும்பாதவர், பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர். அன்று இந்த கேரவன் கலாச்சாரம் இல்லாத சூழ்நிலையில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது அவருக்கு இயற்கை உபாதை வந்திருக்கிறது. அதை கழிப்பதற்காக ஒரு இடத்துக்கு சென்று இருக்கிறார்.

அந்த சமயத்தில் தன்னை யாரோ மறைந்திருந்து பார்க்கிறார்கள் என்று தோன்றியதால் உஷாரான நடிகை அந்த இடத்தை விட்டு நகர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டார். சிறிது தூரம் திரும்பி வந்து பார்த்தால் ஒரு மரத்தின் மறைவில் இருந்து அந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்த நடிகர், தன்னை பார்க்க முயற்சி செய்தது நடிகைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version