வேறு நடிகருடன் கள்ள உறவில் கொழுக் மொழுக் நடிகை..! கையும் களவுமாக பிடித்த பிரகாச நடிகர்..!

திரை உலகில் நடிக்கும் நட்சத்திரங்கள் நிமிடத்திற்கு ஒருவர் என்று சட்டையை மாற்றுவது போல ஆளை மாற்றி விடுவார்கள். அது போலவே கொழுக்கு, மொழுக்கு என்று இருக்கும் நடிகை ஒருவர் பிரகாசமான நடிகரை காதலித்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று மாஸ் நடிகரோடு உறவில் இருந்த விஷயம் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

அக்கட தேசத்தில் நடிகையான இவர் பெரிய இயக்குனர் ஒருவரின் படத்தில் சின்ன  கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தமிழ் திரையுலகில் களம் இறக்கப்பட்டார்.

இவர் பார்ப்பதற்கு புசு,புசு என்று சதை பற்றோடு இருந்த காரணத்தால் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நாள் செல்ல செல்ல இவருக்கு புதிய பல வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

முதல் படத்தில் தன்னோடு சேர்ந்து நடித்த அந்த பிரகாச நடிகரோடு ஆரம்ப காலத்தில் நட்போடு பழகி வந்தவர், அந்த நட்பு காதலாய் மாறியது என்பதை புரிந்து கொண்டார். இவர்கள் அரசல், புரசலாக அங்கேயும், இங்கேயும் சுற்றுவது திரை வட்டாரத்தில் பேசும் பொருள் ஆனது.

இதனை அடுத்து பிரகாச நடிகரின் அப்பாவின் காதுக்கு அந்த விஷயம் சென்றதால் குடும்பத்திற்குள் பிரச்சனை வெடித்தது. அந்த நடிகையை காதலித்தால் குடும்ப மானமே போய்விடும்.

அத்தோடு உனது சினிமா எதிர்காலம் நிர்மூலம் ஆகிவிடும் என அடுக்கடுக்காக அப்பா அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்ததால் அந்த நடிகையை பிரகாச நடிகர் வேண்டாம் என விட்டு விட்டார்.

இதனால் துடித்துப் போன அந்த கொழு, கொழு நடிகை கோபத்தோடு தன் காதலனுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து மாஸ் நடிகரோடு இணைந்து ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டார். இதனை அடுத்து அந்த மாஸ் நடிகரோடு தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி பிரகாச நடிகரை சீண்டிப் பார்த்தார்.

இதையெல்லாம் கடந்து ஒரு கட்டத்தில் அந்த மாஸ் நடிகரோடு ஹோட்டல் உல்லாசமாக இருந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிரகாசமான நடிகர், நடிகைக்கு போன் செய்து கோபமாக பேசினார்.

அத்தோடு நிற்காமல் நேரடியாக  ஹோட்டலுக்கு சென்று மாஸ் நடிகரை சரமாரியாக திட்டியதாக தெரியவந்துள்ளது. இதை அடுத்து ஹோட்டலில் இருவர் இடையேயும் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வானது தற்போது திரை துறை பிரபலங்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. அது மட்டுமல்லாமல் விசயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவர்களுக்குள் இந்த விஷயம் பற்றி பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version